தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 augustus 2013

வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைப்பதில் தாமதம் காட்டவில்லை!- ஜி எல் பீரிஸ்


வடக்கு ஆட்சியைக் கைப்பற்ற கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசும் இரகசிய உடன்படிக்கை! - அமைச்சுப் பதவிகளை துறக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 02:50.27 AM GMT ]
வடக்கு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இரகசிய உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறு கூட்டமைப்பும் இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த இரகசிய உடன்படிக்கையின் அடிப்படையில் கிழக்கு முஸ்லிம்களின் உரிமைக்காக போராடும் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக திகாமடுல்ல மாவட்டத்தை மையமாக்க் கொண்டு கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் கோரி வந்த்து.
எனினும், இந்தக் கோரிக்கையை கைவிடப் போவதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அவற்றை கிழக்கு மாகாணத்திற்கு வழங்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் கோரி வருவதாகத் தெரிவித்தள்ளார்.
இதன் மூலம் கிழக்கு மாகாண சிறுபான்மை தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சுப் பதவிகளை துறக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம்
அமைச்சுப் பதவிகளை துறக்குமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு கட்சி ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
தனிக் கட்சியாக இம்முறை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற காரணத்தினால், ஆளும் கட்சி அமைச்சுப் பதவிகளை வகிப்பதில் பயனில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்திலிருந்து விலகி தனித்து தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும் அமைச்சுப் பதவிகளை வகிப்பதனால் அரசாங்கத்தை விமர்சனம் செய்ய முடியாது.
எனவே, அமைச்சுப் பதவிகளை தேர்தல் முடிவடையும் வரையிலேனும் துறந்து பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது பசீர் சேகுதாவூத் அமைச்சுப் பதவியை துறந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதனை முன்னுதாரணமாக்க் கொண்டு பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
எனினும் இது குறித்து கட்சித் தலைமை இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைப்பதில் தாமதம் காட்டவில்லை!- ஜி எல் பீரிஸ்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 02:10.53 AM GMT ]
வெளிநாட்டு இராஜதந்திரிகளை நாட்டுக்கு அழைப்பதில் அரசாங்கம் எவ்வித தாமதத்தையும் காட்டவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பலர் இலங்கைக்கு வந்து போருக்கு பின்னர் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுள்ள அபிவிருத்திகளைக் கண்டு வியந்துள்ளனர்.
அண்மையிலும் ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை வந்து நிலைமைகளை ஆராய்ந்தனர் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெலிவேரிய சம்பவம் வெளிநாடுகள் இலங்கை மீது தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten