தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 augustus 2013

வெலிவேரிய சர்ச்சைக்குரிய தொழிற்சாலையினை அகற்ற ஜனாதிபதி உத்தரவு!


வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு காரணமாயிருந்த  சர்ச்சைக்குரிய கையுறை தொழிற்சாலையினை உடனடியாக இடமாற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் புதிதாக அமைக்கப்படும் அனைத்து தொழிற்சாலைகளும் முதலீட்டு சபையின் வலயத்திற்குள்ளேயே அமைக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
வெலிவேரியவில் ஏற்பட்டுள்ள நிலக்கீழ் நீர் மாசடைவு மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அரச அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் உயர்மட்ட கூட்டமொன்றை இன்று திங்கட்கிழமை நடத்தியுள்ளார்.
சர்ச்சைக்குரிய கைத்தொழிற்சாலையை வெவலிவேரிய பிரதேசத்திலிருந்து அகற்ற வேண்டும்.மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
பல வெளிநாட்டு அரசாங்கங்களின் அழுத்தங்கள், புதன்கிழமை நடைபெறவுள்ள எதிர்க்கட்சி கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் என்பவற்றின் பின்னணியிலேயே இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten