தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 augustus 2013

அவுஸ்திரேலியாவுக்கு ஆட் சேர்க்கும் விளையாட்டுத்துறை பாப்பா !


2009ம் ஆண்டு காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்தவேளை, இயக்கத்தில் இருந்து பலர் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றார்கள். இதில் புலிகள் தரப்பில் இருந்து முக்கியமான சிலர் இலங்கை அரசுடன் இணைந்தார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தயா மாஸ்டர், ஜோர் மாஸ்டர் மற்றும் விளையாட்டுத் துறை பொறுப்பாளர் பாப்பா ஆகும். ஆரம்ப காலங்களில் பாப்பா பலரை காட்டிக்கொடுத்து வந்தார். வெளிநாடுகளில் இருந்துவரும் தமிழர்கள் பலரை இவர் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காட்டிக்கொடுத்தார். அதுமட்டுமல்லாது ஊரில் உள்ள பலரை இவர் இராணுவத்திற்கு அடையாளம் காட்டினார். தற்போது உள்ள சூழ் நிலையில் இது அவசியமற்றதாகியுள்ளது. அதனால் இவரை இலங்கை இராணுவம் வேறு விதத்தில் பயன்படுத்தி வருகிறது.

முன் நாள் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களை இவர் சந்தித்து 5,000 டாலர்களை பெற்றுக்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் முகவராக இவர் மாறியுள்ளார். பாப்பா தற்போது ஆட்களை அனுப்பும் படலத்தில் இலங்கை இராணுவத்தோடு கைகோர்த்து உள்ளார் என அறியப்படுகிறது. ஒவ்வொருவரிடமும் தலா 5,000 அமெரிக்க டாலர்களை வாங்கிக்கொண்டு அவர்களை புத்தளம், சிலாபம் போன்ற கடற்கரைகளில் இருந்து கப்பல் ஏற்றி வருகிறார், பாப்பா. குறிப்பிட்ட அகதிகள் கப்பலில் சிறிது தூரம் சென்றபின்னர், அவர்கள் குறித்த தகவலை இலங்கை அரசுக்கு இவர் வழங்கியும் வருகிறார். பின்னர் அவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினட் கைதுசெய்தும் வருகிறார்கள். அதுமட்டுமல்லாது இலங்கை கடற்படையை அவுஸ்திரேலிய அரசு பாராட்டியும் வருகின்றது என்றால் பாருங்களே.

Geen opmerkingen:

Een reactie posten