[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 01:10.32 PM GMT ]
கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்தும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திங்கட் கிழமை திறந்து வைக்கப்பட உள்ளது.
எதிர்காலத்தில் மனிதர்கள் உயிரிழக்க காரணமாக அமையும் விடயங்களில் மனநோய் ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சர்வதேச ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதனை முன்னிட்டு, பிரான்ஸூக்கு சொந்தமான போககஸ் கப்பம் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதாக அதிகாரசபை கூறியுள்ளது.
ஜோட்டாரில் இருந்து புறப்படும் இந்த கப்பல் திங்கட் கிழமை அதிகாலை கொழும்பு துறைமுகத்தை சென்றடைய உள்ளது.
பிரான்ஸின் மிகப் பெரிய சரக்கு கப்பல் இலங்கைக்கு வருவது மிகவும் முக்கியமான நிகழ்வு எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மனநோயால் அதிகமானோர் உயிரிழக்க வாய்ப்பு- வெலிவேரியவில் இயங்கும் தொழிற்சாலை அரசுக்கு சொந்தமானது: ஜே.வி.பி
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 01:54.41 PM GMT ]
அங்கொட தேசிய மனநோய் மருத்துமனையில் இன்று ஆரம்பமான ஆசிய உளவியல் நிபுணத்துவ மருத்துவர்களின் 04 வது மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் அங்கும் மேலும் உரையாற்றுகையில்,
மனநோய் சிகிச்சைக்கான மருத்துவர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் பாரிய தட்டுப்பாடு இதற்கு காரணமாக அமையலாம். இலங்கையில் மனநோய் மருத்துவர்களுக்கு, ஊழியர்களுக்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுகிறது.
இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர்.
உளவியல் மருத்துவ கொள்கைகளின் கீ்ழ் மனநோயினால் பாதிக்கப்பட்ட சகல நோயாளர்களுக்கும் சிறந்த மருத்துவ சேவையை வழங்க வேண்டிய எமது கடமை என அமைச்சர் தெரிவித்தார்.
வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இயங்கும் தொழிற்சாலை அரசுக்கும் சொந்தமானது- ஜே.வி.பி
வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இயங்கும் இறப்பர் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலை, அரசாங்கத்தினால், ஊழியர் சேமலாப நிதி ற்றும் அரச வங்கிகளின் பணத்தை முதலீட்டு நடத்தப்படும் தொழிற்சாலை என தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜே.வி.பி தெரிவிக்கின்றது.
முன்னணி தனியர் வர்த்தகர் ஒருவரின் தனியார் நிறுவனத்தின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலைக்கான அரசாங்கம், ஊழியர் சேமலா நிதி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் பணத்தை அரசாங்கத்தின் பங்காக முதலீடு செய்துள்ளது என ஜே.வி.பியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரத்துபஸ்வல பிரதேசத்தில் உள்ள சுமார் 10 கிராமங்களை சேர்ந்த மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இந்த தொழிற்சாலை காரணமாக இருக்கின்றது.
இந்த நிலையில், மக்களின் ஆர்ப்பாட்டத்தை, இராணுவம், அதிரடிப்படை, பொலிஸாரை கொண்டு துப்பாக்கிச் சூட்டை நடத்தி கிராம மக்களுடன் மோதலை ஏற்படுத்திய பின்னர் அந்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
அரசாங்கத்திற்கு பங்குகள் இருப்பதன் காரணமாகவே ஏற்கனவே அரசாங்கம் அந்த தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கவில்லை.
பிரதேச மக்கள் தமது இந்த உக்கிர பிரச்சினை தொடர்பில் பிரதேச செயலாளர், பிரதேச அரசியல் அதிகாரிகளிடம் தெளிவுப்படுத்தியிருந்த போதும், அரசாஙகம் துரிதமாக தலையிட்டு பிரச்சினை தீர்க்கவில்லை.
அந்த தொழிற்சாலை அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டது என்பதற்காகவே அரசாங்கம் இந்த மெத்தன போக்கில் நடந்து கொண்டது என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten