[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 05:59.30 AM GMT ]
இந்த குதிரைகளின் பெறுமதி சுமார் இரண்டு கோடி ரூபா எனவும் தற்போது அந்த குதிரைகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாகவும் குதிரைப்படைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தென் பகுதி சிங்கள மக்களை அழைத்துச் சென்று வடக்கில் குடியேற்றுவது பாரிய தவறு. அதனைவிட மீள்குடியேற்றப் பகுதிகளில் பௌத்த கலாசாரத்தைப் பரப்ப முயற்சிப்பதும் பெரும் தவறு என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
இந்த குதிரைகளுடன் இலங்கை பொலிஸின் குதிரைப்படைப் பிரிவில் உள்ள குதிரைகளில் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி தொடங்கி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தென் பகுதி சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றுவது பாரிய தவறு: விஜித ஹேரத்
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 06:27.37 AM GMT ]
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணி ஆக்கிரமிப்புத் தொடர்பான ஒத்தி வைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
வடக்கு இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக நாம் குரல்கொடுத்து வரும் நிலையில் அந்த இராணுவ நிர்வாகம் தற்போது வெலிவேரிய வரைக்கும் வந்து விட்டது. நாடு முற்றுமுழுதாக இராணுவ நிர்வாகத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வடக்கில் இராணுவ நிர்வாகம் இடம்பெற்று வரும் நிலையில் அங்குள்ள மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து கொண்டு செல்லப்படும் மக்கள் குடியேற்றப்படுகின்றனர். இதனை நாம் கடுமையான எதிர்க்கின்றோம்.
இது பாரிய தவறான செயல். அத்துடன், மீள்குடியேற்றப் பகுதிகளில் இடம்பெறும் பௌத்த கலாசாரத்தைப் பரப்பும் செயற்பாடுகள் அதைவிட தவறானது.
பௌத்தத்தை எவர் மீதும் திணிக்குமாறு புத்தர் கூறவில்லை. எனவே, பௌத்த மதம் ஏனைய மக்கள் மீது திணிக்கப்படுவதை உண்மையான பௌத்தன் என்ற வகையில் நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten