தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 augustus 2013

ரிசாத் பதியூதீனின் கோரிக்கைக்காக பதவி விலகப் போவதில்லை! பொலிஸ்மா அதிபர் இளங்கக்கோன்!


இலங்கையில் தனியார் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன!- கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 01:06.43 PM GMT ]
இலங்கையில் தனியார் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட உள்ளது.
பத்து வீத்த்தினால் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் பேரவை அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் ஓர் ஒருதலைப்பட்சமான தீர்மானம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
கட்டண அதிகரிப்பு குறித்து அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் பஸ் உரிமையாளர் பேரவைக்கு சட்ட ரீதியாக காணப்படும் அதிகாரங்களுக்கு அமைவாக கட்டண உயர்வு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு
தனியார் பஸ் கட்டண அதிகரிப்பினை மேற்கொள்ள அனுமதிக்க மாட்டோம் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பத்து சதவீதத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது என இன்று திங்கட்கிழமை காலை அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் கட்டண அதிகரிப்பை மேற்கொண்டால் பயண அனுமதி ரத்துச் செய்யப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அமில ரன்மன்தல தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த பல வருடங்களாக உழியர் சேமலாப நிதியத்தில் பஸ் ஊழியர்களுக்காக கட்டணத்தை பஸ் உரிமையாளர்கள் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் மேற்கொண்டார்.
ரிசாத் பதியூதீனின் கோரிக்கைக்காக பதவி விலகப் போவதில்லை! பொலிஸ்மா அதிபர் இளங்கக்கோன்!
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 12:30.52 PM GMT ]
அமைச்சர் ரிசாத் பதியூதீனின் கோரிக்கைக்காக பதவி விலகப் போவதில்லை என இலங்கையின் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
கிராண்ட்பாஸ் ஸ்வர்ன மாவத்தையில் பள்ளிவாசல் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென அமைச்சர் ரிசாத் பதியூதீன் கோரியிருந்தார். எனினும் அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே தம்மை நியமித்ததாகவும், தம்மை பதவி விலகுமாறு கோர அமைச்சருக்கு உரிமையில்லை.
குறைந்தளவான அதிகாரத்தைப் பயன்படுத்தி கிராண்டபாஸ் மோதலைக் கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவிற்கு அமையவே பொலிஸார் கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது செயற்பட்டதாக தெரிவித்தார்.
அத்துடன், வெலிவேரியவில் இடம்பெற்றதனைப் போன்ற சம்பவங்கள் இடம்பெற வேண்டும் என அமைச்சர் ரிசாத் பதியூதீன் விரும்புகின்றாரா எனவும் பொலிஸ் மா அதிபர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten