தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 augustus 2013

வெலிவேரிய மக்கள் மீது மூன்றாம் தரப்பே தாக்குதல் நடத்தியது. மீண்டும் அரசாங்கம்!, - சர்வதேச விசாரணை வேண்டும்! ஐதேக, - கத்தோலிக்க தேவாலத்துக்குள் ஆயுதம் ஏந்தி சென்றவர்கள் பாவப்பட்டவர்கள்: ஆயர்

ஜனாதிபதி தலைமையில் பத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 02:04.30 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் பத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களை முன்னிட்டு இந்த பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி ஜனாதிபதி தலைமையிலான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
குருணாகல் நகரில் இந்தப் பிரசாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மாவட்ட மட்டத்தில் நடைபெறவுள்ள பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மட்டும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
கிராம, பிரதேச சபை மட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெலிவேரிய மக்கள் மீது மூன்றாம் தரப்பே தாக்குதல் நடத்தியது. மீண்டும் அரசாங்கம்!, - சர்வதேச விசாரணை வேண்டும்! ஐதேக, - கத்தோலிக்க தேவாலத்துக்குள் ஆயுதம் ஏந்தி சென்றவர்கள் பாவப்பட்டவர்கள்: ஆயர்
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 01:00.29 AM GMT ]
வெலிவேரிய ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினருக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள தகவலை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெறுவதாக அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தால் 3 பேர் கொல்லப்பட்டனர்.
பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனினும் இந்த குழப்பத்தின் போது முதலில் இராணுவத்தினரை நோக்கி சிலர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களே பொது மக்கள் மீதும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
வெலிவேரியவில் சர்வதேச விசாரணை வேண்டும் - ஐக்கிய தேசியக் கட்சி
வெலிவேரிய தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் அரசாங்கமே விசாரணை நடத்துவது நம்பத்தகுந்ததாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் இதனால் சர்வதேச ரீதியான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளின் முதலமைச்சு வேட்பாளர்கள் குறித்து முற்கூட்டியே அறிவிக்கப்பட மாட்டாது என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் வேட்பாளர்களுக்கு இடையில் போட்டித் தன்மையை தவிர்ப்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தேர்தல் நிறைவடைந்த பின்னரே குறித்த மாகாணங்களுக்கான முதன்மை வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தேர்தல் சட்டங்களை மீறி அரசாங்க சொத்துக்களை பயன்படுத்தி வருவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக தங்களின் பிரசார தேவைக்காக தேசத்தின் மகுடம் கண்காட்சியையும் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவிருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கத்தோலிக்க தேவாலத்துக்குள் ஆயுதம் ஏந்தி சென்றவர்கள் பாவப்பட்டவர்கள்: ஆயர்
வெலிவேரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் அடைக்கலம் பெற்ற பொதுமக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கத்தோலிக்க ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தேவாலயத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் பாவத்துக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவாலயத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்க செயல் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten