தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 augustus 2013

பொய்யைக் கூறி தமிழ் பேசும் மக்களையும், ஊடகங்களையும் அஸ்வர் எம்பி அவமானப்படுத்த கூடாது: சண்.குகவரதன்


சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞன் மரணம்- கந்தளாய் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 09:30.46 AM GMT ]
சவூதி அரேபியாவில் ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவமொன்றில் கிழக்கு இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசா ரமேஸ் (அர்ஜூன்) என்ற இளைஞரே இவ்வாறு தீ விபத்தில் உயிரிழந்தவராவார்.
இவ்விளைஞன் கடந்த ஒன்றரை வருடங்களாக சவூதியில் பணிபுரிந்து வருவதாகவும் சம்பவதினம் வேலைமுடிவுற்று வந்த இளைஞன், தனது உணவை தயாரிப்பதற்காக சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் இதன்போது ஏற்பட்ட தீ விபத்தில் இவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கந்தளாய் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவில், பெருமல்மடு பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், கஞ்சா போதைப் பொருள் தம்வசம் வைத்திருந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 02 கிலோ கிராம் கஞ்சா, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு செல்லிடப் பேசிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 90 ஆயிரம் என பொலிஸார் கூறினர்.
பொய்யைக் கூறி தமிழ் பேசும் மக்களையும், ஊடகங்களையும் அஸ்வர் எம்பி அவமானப்படுத்த கூடாது: சண்.குகவரதன்
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 09:42.41 AM GMT ]
கொழும்பில் இருந்து தமிழ் மக்களை கைது செய்து பஸ் வண்டிகளில் ஏற்றி அனுப்பியபோது பாராளுமன்றத்தில் தான் மட்டுமே அதற்கு எதிராக குரல் கொடுத்ததாக அஸ்வர் எம்பி ஊடகங்களில் கூறியுள்ளது அப்பட்டமான உண்மைக்கு புறம்பான கருத்தாகும் என கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் கருப்பு மையினால் எழுதப்பட்ட இந்த சம்பவம் 2007ம் வருடம் ஜூன் மாதம் 7ம் திகதி நடைபெற்றது. அன்றைய தினத்தில் கொழும்பில் வாழ்ந்திருந்த தமிழர்களை அதிகாலை வேளையில் தட்டி எழுப்பி பஸ் வண்டிகளில் ஏற்றி வடக்கு, கிழக்கு, மலையக நகரங்களுக்கு இந்த அரசாங்கம் அனுப்பி வைத்தது.
2007ம் வருடம் அஸ்வர் எம்பி பாராளுமன்ற அங்கத்தவராக இருக்கவில்லை. அவரது ஐதேக தேசிய பட்டியல் எம்பி பதவி 2004ம் வருடத்துடன் முடிந்துவிட்டது. தற்போது அவர் இன்றைய அரசாங்க எம்பியாக 2010ம் வருடம் மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில் 2007ம் வருடம் பாராளுமன்றத்தில் இல்லாத அவர் எப்படி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியிருக்க முடியும்? கொழும்பில் வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் எழுப்பி போராடியவர் எமது தலைவர் மனோ கணேசன் என்பது உலகறிந்த உண்மை.
நமது தலைவருடன் இணைந்து, அவ்வேளையில் மகேஸ்வரன் எம்பியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில எம்பிக்களும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினர். பாராளுமன்றத்தில் அன்றைய நிகழ்வுகளை இடை நிறுத்தி, விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்ததை கூட்ட செய்து நமது தலைவர் இது தொடர்பாக நமது தலைவர் பாரிய பங்காற்றியிருந்தார்.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் அவ்வேளையில் அங்கத்தவராகவே இருந்திருக்காத அஸ்வர், தமிழர்கள் வெளியேற்றப்பட்ட போது தான் மாத்திரமே பாராளுமன்றத்தில் இருந்து குரல் எழுப்பியதாக இன்று தமிழ் ஊடகங்களில் கூறியிருப்பது பச்சை பொய். இதன்மூலம், அஸ்வர் எம்பி உண்மைக்கு புறம்பாக கருத்து கூறி தமிழ் பேசும் மக்களையும், தமிழ் ஊடகங்களையும் அவமானப்படுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் தேவைகளுக்காகவும், தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் திட்டங்களுக்குமே அஸ்வர் எம்.பி. பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றாரே தவிர, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஒருபோதும் அவர் குரல் கொடுத்ததில்லை.
கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றபட்ட போது, அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் எமது தலைவர் மனோ கணேசனே தவிர, அன்று அஸ்வர் எம். பி பாராளுமன்றத்திலும் இருக்கவில்லை.
தன்னை தமிழர் நலன்விரும்பியாக அஸ்வர் திட்டமிட்டு காட்டிக்கொள்கிறார். இதற்கு பினால் ஒரு சதி இருப்பதாக நாம் சந்தேகப்படுகின்றோம். இன்று பாராளுமன்றத்தில் எம்பியாக அங்கம் வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் தமிழர் எதிர்ப்பு விடயங்களுக்கு ஒத்து ஊதுகின்றார்.
அது மட்டுமல்ல வடக்கு தமிழ் மக்களின் காணி பறிப்பு விவகாரத்தை சபையில் சம்பந்தன் எம்பி முன்வைத்த போது சட்டப் பிரச்சினையைக் கிளப்பி பாராளுமன்ற சம்பிரதாயங்கள் எனக் கூறி அதை தடுக்க முனைந்தார்.
பத்திரிகைகளில் அவரது பாராளுமன்ற உரைகளின் உண்மைகளை எழுதினால் அதனை மறுக்கின்றார். அவரது சமீபத்து உரையில் தமிழ் பெண்களை மலினப்படுத்தும் விதமாக அவர் தெரிவித்த கருத்தை நாம் ஆட்சேபித்திருந்தோம்.
இப்போது தான் அப்படி பேசவில்லை என அவர் கூறுவது வியப்பாக உள்ளது. அவரது பாராளுமன்ற உரையை வெளியிட்ட அனைத்து தமிழ் ஊடகங்களின் சபை நிருபர்களும் ஒரே மாதிரியாக அஸ்வரின் உரையை பதிவு செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. இப்போது தான் அவ்விதமாக உரையாற்றவில்லை என அஸ்வர் பழியை தமிழ் ஊடக சபை நிருபர்களின் தலைகளில் தூக்கி போடுகின்றார்.
பாராளுமன்றத்துக்கு இருக்கின்ற சிறப்புரிமைகள் காரணமாக தமிழ் ஊடகங்கள் அவரது மறுப்பை பிரசுரித்துள்ளன. ஆனால், இப்போது தான் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத வேளையில், தான் பாராளுமன்றத்தில் இருந்து குரல் கொடுத்தாகவும், அதுவும் எமது தலைவர் மனோ கணேசன் உட்பட தமிழ் எம்பிக்கள் சும்மா இருந்தார்கள் போன்று அர்த்தப்படும் விதமாக தான் மாத்திரம் குரல் கொடுத்ததாகவும் ஊடகங்களுக்கு கூறுவது பாராளுமன்ற மற்றும் பொது சம்பிரதாயங்களை மீறும் செயல் இல்லையா என அஸ்வர் எம்பியிடம் நான் வினவ விரும்புகின்றேன்.
அஸ்வர் எம்.பி பாராளுமன்றத்தில் யாருக்காக குரல் கொடுக்கின்றார் என்பதையெல்லாம் தமிழ் சமூகமும், அவர் சார்ந்த முஸ்லிம் சகோதர சமூகமும் நன்கறியும். தாம் சார்ந்த சமூகத்திற்கே எதுவிதமான நன்மைகளையும் செய்யாத இவர் தமிழ் மக்களை வழிநடத்தும் பொறுப்பை தமிழ் தலைவர்களிடம் விட்டுவிட்டு ஒதுங்கி விடுவது நல்லது.

Geen opmerkingen:

Een reactie posten