தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 augustus 2013

வாகரை அழகாபுரியில் ஆயுதங்கள் மீட்பு- கிரிமிச்சை கிராமத்தில் கட்டுத்துவக்கு வைத்திருந்த விவசாயி கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அழகாபுரி சாந்திமலையில் ஆயுதங்கள் சிலவற்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை படையினர் மீட்டுள்ளனர்.
ரி - 56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, துப்பாக்கிச் சன்னங்கள் 3, கிளைமோர் குண்டு 1, வெடிமருந்து 12 கிலோ, ரி - 81 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் உறை-1 ஆகியவற்றை மீட்டுள்ளதாக வாகரையிலுள்ள இராணுவத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் வாகரையிலுள்ள இராணுவத்தினர் கூறினர்.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் மட்டக்களப்பு 233வது படைத் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
கிரிமிச்சை கிராமத்தில் கட்டுத்துவக்கு வைத்திருந்த விவசாயி கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமிச்சை கிராமத்தில் கட்டுத்துவக்கு ஒன்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் விவசாயி ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், இந்த சந்தேக நபரிடமிருந்து கட்டுத்துவக்கையும் கைப்பற்றியுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை, கிண்ணையடியைச் சேர்ந்த விவசாயி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கட்டுத்துவக்கு ஒன்றை வைத்திருப்பதாக தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்தே சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கட்டுத்துவக்குடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten