குடிநீர் கேட்ட நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது இராணுவத்தை பயன்படுத்தி நடத்திய துப்பாக்கி சூடு தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கிளம்பி வரும் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புகளை திசை திரும்பு நோக்கத்தில் ராஜபக்ஷவினர் இனவாதத்தை தூண்டி வருகின்றனர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு கிராண்ட்பாஸ் சம்பவம் இதனை தெளிவாக எடுத்து காட்டியுள்ளது. இந்த சம்பவம் அரசாங்கத்தினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சம்பவம்.
வடக்கில் தேர்தலை இலக்கு வைத்து, எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களை சீர்குலைப்பதற்காக நடத்தப்பட்ட ஊடக நடவடிக்கையே யாழ்ப்பாணம் நாவற்குழி கிராமத்தில் இருந்த சிங்கள ராவயவின் விகாரை மீதான குண்டு தாக்குதலாகும்.
அதேவேளை வெலிவேரிய மக்களை அடக்கிய ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக ஏற்பட்டுள்ள மக்களின் எதிர்ப்பை வேறு பக்கம் திசை திருப்ப விஷம் அடங்கிய பால்மா என்ற விடயத்தையும் அரசாங்கம் ஏற்படுத்தியது என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten