தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 11 augustus 2013

கண்டியில் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்!

கண்டியில் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் சம்பவமான்று இடம்பெற்றுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
பாஹததும்பரை வெல்லாவ சந்தியில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஆதரவாளர் ஒருவர் வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரசிங்கவின் ஆதரவாளர்களுக்கும், வேட்பாளர் லின்டன் விஜேசிங்கவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten