தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 augustus 2013

வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் மூன்றாக அதிகரிப்பு

வயிற்றுப் பிழைப்பிற்காகவே பலர் அரசியல் நடத்துகின்றனர்: ராஜித- ஜே.வி.பி புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 01:57.54 AM GMT ]
வயிற்றுப் பிழைப்பிற்காகவே இன்று பலர் அரசியல் நடத்தி வருவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று அரசியல் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
பலர் வயிற்றுப் பிழைப்பிற்காகவே அரசியல் நடாத்துகின்றனர். அரசியல் என்பது இரண்டு பக்கங்களும் வெட்டக் கூடிய ஓர் ஆயுதமாகும்.
அதனைக் கொண்டு நல்லதும் செய்யலாம், கெட்ட நோக்கங்களையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். குட்டையான ஆடையணிந்த மகளுக்கு தண்டனை வழங்கிய ஆசிரியை, தண்டித்த அரசியல்வாதிகளை மக்களே அரசியலுக்கு கொண்டு வந்தனர்.
குட்டையான ஆடையணிந்தமைக்காக ஆசிரியை மண்டியிடச் செய்யாது, மகளின் அம்மாவையே மண்டியிடச் செய்திருக்க வேண்டும்.
பணத்திற்காக கொலை செய்யும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும் நாட்டில் இருக்கின்றார்கள். சில அரசில்வாதிகளின் வருமான விபரங்கள் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடமே காணப்படுகின்றது.
வருமான வரித் திணைக்களத்தினாலும் அவர்களது வருமான விபரங்களை வெளியிட முடிவதில்லை.
நாட்டில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப அனைத்து இன மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தம்புள்ள பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும்
ஜே.வி.பி கட்சி புதிய தலைவர் ஒருவரை நியமிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய தலைவர் ஒருவரை அறிவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
வயதுக்கு ஏற்றவாறு கட்சி எனக்கான பொறுப்புக்களை வழங்கும். கியூபத் தலைவர் பிடெல் கஸ்ட்ரோ ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி, தன்னால் முடிந்த பொறுப்புக்களை மட்டும் மேற்கொண்டு வருகின்றார்.
கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவா அல்லது வேறு ஒருவரா என்பது கட்சி பொதுச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் மூன்றாக அதிகரிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 04:31.11 AM GMT ]
வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுத்தமான தண்ணீர் வழங்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த 19 வயதான குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே உயரிழந்துள்ளார்.
முன்னர் 17 வயதான பாடசாலை மாணவரொருவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிழந்துள்ளதுடன் சுமார் 30 பேர் இந்த சம்பவத்தினால் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை பெற்ற மற்றுமாருவர் இன்று மதியம் உயிரிழந்தார்
வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதான ஒருவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 19 வயதான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெலிவேரிய சம்பவத்தில் சிக்கி 17வது பாடசாலை மாணவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதேவேளை இந்த சம்பவத்தை பலர் காணாமல் போய் இருப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்தது.

Geen opmerkingen:

Een reactie posten