யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவின் தாவடியைச் சேர்ந்த ஒருவரை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரையும் குறித்த நபர் தொடர்பாக விபரம் தெரியவில்லை எனவும் விசாரணைகளை கொண்டு வருவதாகவும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம். ஜிப்ரி தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 10 ஆம் திகதி தாவடி கிழக்கைச் சேர்ந்த ஒருவரை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபரை கடத்திச் சென்றவர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த நபர் கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. உறவினர்களுக்கும் ஏன் கடத்தப்பட்டார் என்பது புரியவில்லை. இதுவரைக்கும் கடத்தப்பட்டவர் தொடர்பாக எந்த தகவலும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்றார்.
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 06:23.43 AM GMT ]
Geen opmerkingen:
Een reactie posten