[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 04:18.48 PM GMT ]
புனித ஷவ்வால் மாதத்துக்கான பிறையைக் கண்டு முடிவெடுக்கும் கூட்டம் இன்று பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனையடுத்தே எதிர்வரும் வெள்ளிக்கிழமை 30 நாள் நோன்பை முடித்து நோன்பு பெருநாளை அன்று கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் ஈ.பி.டி.பி
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 04:51.00 PM GMT ]
வடமாகாண சபைத் தேர்தலில் தேர்தல் விதி முறைகளை மீறும் வகையில் இலங்கை அரசின் பங்காளிகளான ஈ.பி.டி.பி யினர் மக்களை தூண்டி ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
அத்துடன் அரசாங்க அலுவலகங்களிலேயே பிரச்சார கூட்டங்களையும் நடாத்தி வருகின்றனர்.
அண்மையில் மீளக்குடியமர்ந்த குப்பிளான் வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளன.
இவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில் அம்மக்களை தூண்டி விட்டு ஆர்ப்பாட்டங்களை நடாத்துகின்றனர்.
இவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில் அம்மக்களை தூண்டி விட்டு ஆர்ப்பாட்டங்களை நடாத்துகின்றனர்.
ஈ.பி.டி.பி யின் சுன்னாகம் பகுதிக்கான அமைப்பாளர் ஒருவரின் உதவியுடன் மீளக்குடியமர்ந்த குப்பிளான் வடக்கு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் மூலம் இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நடாத்தியுள்ளனர்.
இதன் பின்னர் அரசின் சார்பாக வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், உடுவில் பிரதேச செயலகத்திற்குள் நுழைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் வாக்குறுதிகளை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தார்.
இவ்வாறு பகிரங்கமாக தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் ஈ.பி.டி.பி யினரது செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல் திணைக்களம் கரிசனை கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுவதோடு இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten