தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 augustus 2013

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படையின் “பசுபிக் ஏஞ்சல்” கூட்டு செயற்றிட்டம் அமுலாகிறது

மத்தல விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 07:16.06 AM GMT ]
ஜனாதிபதி ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான, அம்பாந்தோட்டை மாவட்டத்தின், மத்தல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் விமானங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனால் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் இலங்கை அரசாங்கம், மத்தல விமான நிலையத்தின் ஊடாக இலங்கை செல்லும் விமான கட்டணங்களை குறைத்துள்ளது.
அதேவேளை எமிரேட்ஸ், கல்ஃப் எயார் போன்ற வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களின் விமானங்கள் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கவும் அங்கு நிறுத்தி வைப்பதற்குமான கட்டணங்களையும் அரசாங்கம் 50 சத வீதமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தவிர விமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண காலமும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிநாட்டு விமானங்களிடம் அறவிடப்பட்ட கட்டணங்களில் 50 வீதம் சலுகையளிக்கப்பட்டது.
வெளிநாட்டு விமானங்களுக்கு வழங்கப்படும் இந்த கட்டண சலுகை தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாக மத்தல சர்வதேச விமான நிலையத்தின் வர்த்தக பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்தல மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அந்த விமான நிலையத்தை விமானங்களை பழுது பார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக சில இணையத்தங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படையின் “பசுபிக் ஏஞ்சல்” கூட்டு செயற்றிட்டம் அமுலாகிறது
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 07:38.17 AM GMT ]
அமெரிக்காவின் பசுபிக் விமானப்படையும், இலங்கை விமானப்படையும் இணைந்து யாழ்.குடாநாட்டில் பசுபிக் ஏஞ்சல் பயிற்சி என்ற கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
இன்று புதன்கிழமை ஆரம்பமான இந்தப் பயிற்சி வரும் 10ம் திகதி வரை தொடர்ந்து இடம் பெறவுள்ளது.
இந்தப் பயிற்சி, மருத்துவ முகாம்களை நடத்துதல், உட்கட்டுமானங்களைப் புனரமைக்கும் செயற்திட்டம் என்று இரண்டு பகுதிகளாக இந்த கூட்டு நடவடிக்கை நடத்தப்படுகிறது. மருத்துவமுகாம் அல்வாய் வடக்கு, அச்செழு ஆகிய கிராமங்களில் நடத்தப்படுகிறது.
புனரமைப்புத் திட்டம், பிரதானமாக பாடசாலைகளை திருத்துதல் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது.
புன்னாலைக்கட்டுவன் ஆரம்பப்பாடசாலை, குட்டியப்புலம் கலவன் பாடசாலை, அச்செழு சிவப்பிரகாச வித்தியாலயம் ஆகியவை இந்தத் திட்டத்தின்கீழ் அமெரிக்க மற்றும் இலங்கை விமானப்படை பொறியியலாளர்களால் திருத்தியமைக்கப்படவுள்ளன.
கடற்படை மற்றும் விமானப்படையுடன், அமெரிக்கா தொடர்ச்சியாக மனிதாபிமான மற்றும், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டுப் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கும் திட்டமிட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்தி

Geen opmerkingen:

Een reactie posten