தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 augustus 2013

புலிகளின் ஆயுதங்களை வாங்கிய இந்தியா ? அந்தோணி தகவல் !

நேற்றைய தினம் இந்திய லோக் சபாவில் நடந்த கேள்வி நேரத்தில், அன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணி குண்டு ஒன்றை தூக்கிப்போட்டு இருக்கிறார். 2010ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை எந்த எந்த நாடுகளிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்கியது என்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இந்திய பாதுகாப்பு அமைச்சு சுமார் , 2.5 லட்சம் கோடிக்கு ஆயுதங்கள் சில வெளிநாடுகளிடம் இருந்து இறக்குமதிசெய்ததாக அப்போது அந்தோணி தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, அமெரிக்கா, ரஷ்யா, போலந்து, பின்லாந்து , போன்ற நாடுகளிடம் தனது நாடு ஆயுதங்கள் வாங்கியதாகவும் இதேவேளை இலங்கையில் இருந்தும் தமது நாடு ஆயுதங்களை வாங்கியதாகவும் ஏ.கே. அந்தோணி மேலும் தெரிவித்துள்ளார். இதனால் லேக் சபாவில் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் போர் 2009ம் ஆண்டு முடிவுற்ற பின்னர், புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை கோட்டபாய தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது யாவரும் அறிந்த விடையம். இன் நிலையில் இலங்கை அரசானது புலிகளிடம் இருந்து கைப்பற்றிய அதி நவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இலங்கையிடம் இருந்து தமது நாடு ஆயுதங்களை கொள்வனவு செய்தது என்பதனை, இந்தியப் பாதுகாப்பு அமைச்சரே ஒப்புகொண்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தங்கம் மற்றும் தங்க நகைகளையும் கோட்டபாய இவ்வாறு விற்பனை செய்துவிட்டாரா என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது. 

சமீபத்தில் கூட இந்திய தூதுக்குழுவினர் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாகப் பேச இலங்கை சென்றார்கள். இவர்கள் எல்லாரும் ஆத்மார்த்தமாக ஒரு அரசியல் தீர்வு ஒன்று காணாவா அங்கே சென்றார்கள் ? இல்லை என்றால் பேரம் பேசத்தான் சென்றார்களா என்று தெரியவில்லை. தமிழ் நாட்டு மக்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள் எவ்வளவு போராட்டங்களை நடத்தினாலும் அவர்களை துட்சமாக மதித்து , தமது போக்கில் தான் இன்னும் இந்திய மத்திய சர்கார் செல்கிறது.

Geen opmerkingen:

Een reactie posten