[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 11:16.48 AM GMT ]
இதுதொடர்பிலான இரகசிய கூட்டமொன்று லண்டனில் இடம்பெற்றுள்ள விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
சர்வதேச அரங்கில் சிறிலங்கா அரசுக்கு கடும் சவாலாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்து வருகின்றதென்ற செய்திகளை சமீபத்திய காலமாக தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் நிலையில் குறித்த இரகசிய கூட்டம் இடம்பெற்றுள்ளது.
புலர்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் கொளுந்துவிட்டு எரியும் தமிழ்த் தேசியம் எனும் கருத்தினை தளமாக கொண்டு, தமிழர்களிடையே குழப்பங்களை விளைவிக்கும் பொருட்டு தமிழ்த் தேசியத்தின் பெயரால் புதிய தமிழ் இணையத்தளங்களை உருவாக்குவது, தேர்தலில் மக்களின் வாக்களிக்கும் ஆர்வத்தினை குறைக்கும் நோக்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் என்ற பெயரில் எதிர்பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பிலும் இந்த இரகசிய கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு கரம் நீட்டாது தொடர்ச்சியாக இழுபறி நிலையில் இருக்கும் நேர்வேயினை தளமாக கொண்டு இயங்கும் நெடியவனின் ரீசிசி எனப்படும் அனைத்துலக செயலகத்தின் கட்டமைப்புக்களையும் சிங்களத்தில் இந்த சதிச்செயலுக்குள் வீழ்த்திக் கொள்ளலாம் என்ற கருத்தும் இக்கூட்டத்தில் ஒரு சிலாரல் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழம் நோக்கி சுதந்திர போராட்டத்தினை நசுக்க எல்லைகடந்து விரியும் சிங்களத்தின் இச்சதிச் செயல்கள் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் அவர்கள் கருத்து வெளியிடும்போது, இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான சுதந்திரமான அரசியல் வெளி முற்றாக இல்லாதவொரு சூழலில், சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலாக அமையும் வட மாகாண தேர்தலை அங்குள்ள தமிழர்கள் எதிர்கொண்டுள்ளார்.
ஆனால் தமிழீழமே தமிழ்மக்களுக்கான நிரந்தரமானதும் நிலையானதுமான அரசியல் தீர்வென்பதனை வெளிபடுத்துவதற்கான சுதந்திரமான ஒர் அனைத்துலக வெளியில், நாடுகடந் தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலை புலம்பெயர் தமிழர்கள் எதிர்கொள்கின்றார்கள்.
இந்நிலையில் சுதந்திர தமிழீழம் என்ற எங்களது விடுதலை வேட்கையினை ஜனநாயக முறையில் புலம்பெயர் தமிழர்கள் வெளிப்படுத்துவதும், விழிப்பாக இருப்பதுமே இவ்வாறான சதிமுயற்சிகளுக்கு தக்க பதிலடியாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலை வெளிப்படையாகவும் உண்மைத் தன்மையுடனும் நடாத்த வேண்டிய எமது பொறுப்பைச் சீராகச் செய்து முடிப்பதற்கு தமிழர்களாகிய உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பும் உறுதுணையும் வேண்டி நிற்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையாளர் செ. ஸ்ரீதாஸ் அவர்கள் புலம்பெயர் தமிழர்களை நோக்கி சமீபத்தில் கோரியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten