மாடு குறுக்கால் பாய்ந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம் - மத்தியஸ்த சபை சிறந்த முறையில் செயற்பட்டால் முறைப்பாடுகள் குறையும்: பொலிஸ் பொறுப்பதிகாரி
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 03:46.35 AM GMT ]
கல்முனை- மட்டக்களப்பு பிரதான வீதியில் புதுக்குடியிருப்பில் முன்னர் விசேட அதிரடிப் படையினர் முகாம் இருந்த பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்று கொண்டிருக்கும்போது மாடு ஒன்று திடீரென பாய்ந்ததன் காரணமாக இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் உடனடியாக ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதேவேளை இப்பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் காரணமாக அதிகளவிலான விபத்துகள் இடம்பெற்று வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு தடவைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்தும், அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவித்தும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்தியஸ்த சபை சிறந்த முறையில் செயற்பட்டால் முறைப்பாடுகள் குறையும்: பொலிஸ் பொறுப்பதிகாரி
மத்தியஸ்த சபையினரின் செயற்பாடுகள் சிறந்த முறையில் அமையுமானால் அது இந்த சமுதாயத்திற்கு அதிக நன்மைகளைத் தேடித் தரும், அத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு வரும் முறைப்பாடுகளைக் குறைக்கவும் அது வழி செய்யும் என ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்பர தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மத்தியஸ்தர் சபைக்கான புதிய மத்தியஸ்தர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்ந்து உரையாற்றுகையில்!
மத்தியஸ்த சேவை மிகவும் பொறுப்புள்ளதும், நன்மை தரக்கூடியதுமாகும். பிணக்கில் சம்பந்தப்பட்ட இரு சாராரையும் இணங்கச் செய்து ஒரு மத்தியஸ்திற்கு வரச் செய்வதால் அதிக நன்மைகள் கிடைக்கின்றன.
மத்தியஸ்தர்களாக உள்ள நீங்கள் எப்பொழுதும் நீதிமன்றத்திற்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளீர்கள். பொலிஸாராகிய எமக்குக் கிடைக்கின்ற முறைப்பாடுகளுக்கு எங்களால் தீர்வு காணப்படாமல் போய் அவற்றை மத்தியஸ்த சபைகளுக்கு அனுப்பி அங்கே இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட பல பல சம்பவங்கள் இருக்கின்றன. இதனைப் பாராட்டவும் கௌரவமளிக்கவும் வேண்டும்.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தினமும் 20 தொடக்கம் 25 வரை முறைப்பாடுகள் கிடைக்கின்றன. காணிப்பிரச்சனை, பணப்பிரச்சனை, குடும்ப பிரச்சனை, கைகலப்பு போன்ற பிரச்சனைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் தான் தினமும் வருகின்றன.
இத்தகைய பிரச்சினைகள் அனைத்தையும் மத்தியஸ்த சபைகளுக்கு அனுப்பி வைக்க முடியும். அங்கே இவற்றுக்காக இணக்கப்பாடுகள் கிடைக்கலாம். தமது பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு நீதிமன்றத்தை அனுக முடியாதவர்களும் உள்ளார்கள்.
மத்தியஸ்த சபையின் அழைப்புக்கு தொடர்ந்து வராமல் மறுப்பவர்களுக்கு எதிராக பிடியாணை உத்தரவை பெற்று அவர்களைக் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் பொலிஸாரால் முடியும்.
செங்கலடிப் பிரதேசத்தில் பணத்தோடு சம்பந்தப்பட்ட அதிக பிரச்சனைகள் குறித்தே பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வருகின்றன. மக்களிடமிருந்து பணத்தைப் பெற்ற பல நபர்கள் வெளிநாடு சென்று விட்டார்கள். இதனால் இத்தகைய பல பிரச்சனைகள் இன்னமும் தேங்கிக் கிடக்கின்றன. அதனால் பணத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்றும் மத்தியஸ்த சபை உறுப்பினர்களை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
மத்தியஸ்த சபையின் புதிய தலைவர் முத்துப்பிள்ளை சசிகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், கரடியனாறு பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜீ.பிரேமரட்ன, மத்தியஸ்த சபைக்குப் பொறுப்பான முகாமைத்துவ உதவியாளர் ஐனோன் ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி: விமல் வீரவன்ச
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 02:51.48 AM GMT ]
போரின் பின்னர் நாட்டில் மீண்டும் குழப்பங்களை எற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
போர் இடம்பெற்ற காலத்தில் வாரந்தோறும் குண்டுகள் வெடித்தன.
ஊடகங்களில் நாடு ஸ்திரமற்ற நிலையில் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன. நாட்டில் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தும் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த முயற்சியில் முக்கியத்துவம் வகிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten