படையினர் தமது கடமைகளுக்கு அப்பாற்பட்ட எந்தச் செயல்களிலும் ஈடுபடுவதை தான் சகித்துக் கொள்ளப் போவதில்லை என்று புதிய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பனாகொடவில் உள்ள, சிறிலங்கா இலகு காலாற்படைப்பிரிவின் தலைமையகத்தில் நேற்று அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எல்லா வேளைகளிலும் படையினர் கடுமையான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். படையினர் தமக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளுக்கு அப்பால் செயற்படுவதை சகித்துக் கொண்டிருக்கமாட்டேன் என்றும் அவர் எச்சரித்தார்.
வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது படையினர் நடத்திய தாக்குதல், கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிகழ்வில், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட படையினருக்காக “உடரை ஒபா” (Udarai Oba) என்ற நலன்புரித் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten