தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 augustus 2013

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய வழங்கப்பட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்


ரவிந்து குணவர்தன எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 07:19.31 AM GMT ]
கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம். சஹாப்தீன் உத்தரவிட்டார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நீதிமனறத்தில் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய ரவிந்து குணவர்தனவை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில் இன்று நீதமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ரவிந்து குணவர்தனவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ரவிந்து குணவர்தன, கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த கோடிஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலை வழங்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர்.
ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ரவிந்து குணவர்தன, கொழும்பு பெப்பிலியான மயூரா மாவத்தையில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது, கடந்த 7 ஆம் திகதி இரகசிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
இவரது தந்தையான வாஸ் குணவர்தன இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 06:54.31 AM GMT ]
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் வழங்காதிருக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க போவதில்லை என தெரிவித்து, ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட தயாராகி வருவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய அல்ல, அரசியலமைப்புச் சடத்திற்கு அமையவே வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten