இடம்பெயர் வாக்காளர்கள் வாக்களிக்க விண்ணப்பிக்கும் திகதி வரும் 12ம் திகதி வரை நீடிப்பு!- தேர்தல் செயலகம் - வடக்கில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடையாள சான்றிதழ்களை பெற விண்ணப்பம்!
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 11:45.20 AM GMT ]
மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது நேரடியாக தேர்தல் செயலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தனவை 72 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
விண்ணப்ப படிவங்களை பிரதேசங்களில் உள்ள கிராம உத்தியோகஸ்தர்களிடம் பெற்று கொள்ள முடியும்.
அதேவேளை இடம்பெயர்ந்த வாக்காளர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வடக்கில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடையாள சான்றிதழ்களை பெற விண்ணப்பித்துள்ளனர்.
இலங்கை மனித உரிமை கேந்திர நிலையம், ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து கபே அமைப்பு வடக்கில் ஒழுங்கு செய்த அடையாள அட்டைகள் மற்றும் பிறப்பத்தாட்சி பத்திரங்களை வழங்கும் நடமாடும் சேவையில், 20 ஆயிரத்து 64 பேர் அடையாள அட்டைகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர்.
அடையாள அட்டைகளை பெறுவற்காக 10 ஆயிரத்து 996 பேரும், பிறப்பத்தாட்சி பத்திரங்களை பெற 8 ஆயிரத்து 885 பேரும் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர்.
23 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடிந்தமையானது, வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்களிடம் இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
இம்முறை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டைகள் இல்லை என்பதால், அதனை அவர்களுக்கு பெற்று கொடுப்பதற்காக இந்த நடமாடும் சேவையை ஏற்படு செய்ததாக இலங்கை மனித உரிமை கேந்திர நிலையத்தின் தேசிய அமைப்பாளர் அஹமட் மனாஸ் குறிப்பிட்டார்.
ரவிந்து குணவர்தனவை 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 12:27.24 PM GMT ]
கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடிஸ்வரரான வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ரவிந்து குணவர்தன, குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார்.
மொஹமட் ஷியாம் என்ற வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
மொஹமட் ஷியாம் என்ற வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Geen opmerkingen:
Een reactie posten