தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 augustus 2013

சுவிஸ் மற்றும் பிரான்ஸில் உணர்வுபூர்வமாகக் அனுஸ்டிக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு நாள் !

இனவெறி சிங்கள அரச வான்படையின் திட்டமிட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் நினைவுகளைச் சுமந்ததும், தமிழர்களின் நெடிய வரலாற்றுப் பயணத்தில் மறக்கமுடியாத ஆறாவடுவாக மாறியதுமான வள்ளிபுனம் செஞ்சோலை வளாகப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள் நேற்று சுவிஸ் பேர்ன் தமிழர் இல்லத்தில் உணர்வுபூர்வமாகக் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழர் இல்லம் நிரம்பிய மக்கள், மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்களைத் தோற்றுவிக்க காரணியாய் இருந்த முதற் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்களுக்குரிய முதலாவது ஈகச்சுடரினைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கான ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் செஞ்சோலை சிறார்களின் நினைவு சுமந்த பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.
நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளினது நினைவுகள் சுமந்த கவிதைகளும், உரைகளும் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
பிரான்சில் இடம்பெற்ற 7 ஆண்டு செஞ்சோலை படுகொலை நினைவு நாள்
சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க, அன்று இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கோஃபி ஆனான் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.
மஹிந்த ராஜபாக்ஸ, தனது மகிழ்ச்சியை தெரிவிக்க அவருடன் அமெரிக்க, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நார்வே, சமாதான பேச்சு வார்த்தைக்கு பாதுகாவலர்கள் என்று கூறியவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
போர்க்காலம் இல்லாத நேரத்தில் நான்கு போர் விமானங்கள் 16 கூண்டுகளை வீசி கொன்ற 53 பள்ளி மாணவர்களின் படுகொலை - திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. அதை பார்த்து கொண்டிருந்தவர்கள், அமைதியாக இருந்தவர்கள் அந்த இனப்படுகொலைக்கு பக்க துணையாக இருந்தார்கள் என்று கூறுவதில் என்ன தவறு.
2006 உடன் படுகொலைகள் நிற்காமல், முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கும் இனப்படுகொலை, நடக்கும் நாட்டில் பொதுநலவாயா நாடுகளின் மாநாட்டை நடத்தி சிறிலங்கா என்ற நாட்டிக்கு அங்கீகாரம் கொடுக்க நினைக்கிறது சர்வதேசம்.
இந்த நாளில் சர்வதேச நாடுகளின் நிலைபாட்டை கண்டித்து பாரிசில் செஞ்சோலை படுகொலையின் நினைவுகள், செங்கொடியின் தியாகாங்கள் நினைவு கூறப்பட்டு நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, தென் ஆபிரிக்கா நாட்டின் தூதராலயாத்தில் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
பிரான்சு தமிழீழ மகளீர் அமைப்பு ஒழுங்கு செய்த இந்த ஒன்று கூடலில் பிரான்சு இளையோர் அபைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பல அரசியல் வேலை திட்டங்களை முன்னெடுத்து இருந்தனர்.
எமது போராட்டம் அடுத்த வாரம் நியூசிலாந்து தூதரகம் அருகில் மெட்ரோ Victor Hugo (Ligne 2) அருகில் நடைபெறும். தொடர்ச்சியான எமது போராட்டங்கள் தான் நீதியான விடுதலையை தேடித்தரும் என பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten