தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 augustus 2013

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 49 பேர் இந்தியாவில் கைது!

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 49 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தின் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை அகதிகள் 49 பேர் படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றுள்ளனர். இந்நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்களிடம் நாகை குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள், தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவ்வப்போது முகாம்களில் இருந்து தப்பி அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten