[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 10:44.10 AM GMT ]
கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி, அவரிடம் இருந்து 6 ஆயிரம் ரூபா பணத்தையும் செல்லிட பேசியையும் இளைஞர்கள் கொள்ளையிட்டுள்ளனர். 19 வயதுடைய நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைத் நாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்களாகவும் தொழிலாளர்களாகவும் வேலைக்கு சென்று, அங்கு பல சித்திரவதைகளை அனுபவித்து, அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த 28 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
20 வயதான இளைஞன் இரவு பணி முடிந்து, சுற்றுலா விடுதிக்கு அருகில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸூக்காக காத்திருந்த போது, அங்கு சென்ற இந்த இளைஞர்கள் கத்தியை காண்பித்து மிரட்டி அவரை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அஹங்கம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தாம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குவைத்தில் சித்திரவதைகளை அனுபவித்த 28 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 09:09.10 AM GMT ]
இவர்கள் இன்று அதிகாலையில் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் பல வருடங்கள் குவைத்தில் வேலை செய்து வந்துள்ளனர். எனினும் இவர்களுக்கு சம்பளம் கூட கொடுக்கப்படாத நிலையில் பல இடங்களில் பரிதாமாக தங்கியிருந்துள்ளனர்.
இதன் பிறகு, குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று தமது நிலைமை தெரியப்படுத்தியதை அடுத்து, தூதரகம் அவர்களை இலங்கை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இவர்களில் அடங்குவதாக பணியகத்தின் அதிகாரிகள் கூறினர். நாடு திரும்பியவர்களுக்கு தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten