தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 augustus 2013

வெள்ளவத்தையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு- 15வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம்

இரகசிய பொலிஸார் எனக் கூறி தமிழ் பெண்ணிடம் பணம் மற்றும் நகை கொள்ளை: சிலாபத்தில் சம்பவம்
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 08:59.20 AM GMT ]
இரகசிய பொலிஸார் என தெரிவித்து, பெண்ணொருவரை முச்சக்கர வண்டியொன்றில் அழைத்துச் சென்ற சிலர், அவரிடம் இருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தையும் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நோயாளி ஒருவரை பார்ப்பதற்காக தனது கணவருடன் இந்த பெண் சிலாபம் வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.
அங்கிருந்து கணவர் சென்ற பின்னர், அந்த பெண்ணிடத்திற்கு சென்ற இரண்டு பேர் தம்மை இரகசிய பொலிஸார் என கூறி, வெளியில் அழைத்துச் சென்று முச்சக்கர வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்று இந்த கொள்ளையை நடத்தியுள்ளனர்.
உடப்பு ஆண்முனை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான காளிமுத்து சித்ரகலா என்ற பெண்ணிடம் இருந்தே பணமும் நகையும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
பெண்ணிடம் குண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனால் தங்க ஆபரணங்களை கழற்றி அதனை தம்மிடம் இருந்த பொதியில் வைக்குமாறும் சந்தேக நபர்கள் கூறியதாகவும் பின்னர் தனது கைப்பையை சோதனையிட்ட அவர்கள் தன்னை நடு வழியில் விட்டு சென்றதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
அவர்கள் சென்ற பின்னர் கைப் பையை திறந்து பார்த்த போது, அதில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளையிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
யார் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சிலாபம் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளவத்தையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு- 15வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம்
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 09:37.21 AM GMT ]
கொழும்பு வெள்ளவத்தை ஹெக்லோக் வீதியில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, அந்த நிலையத்தை நடத்தி வந்ததாக கூறப்படும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அங்கிருந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 23, 33, 38 வயதான பெண்கள் என வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு உட்பட அதன் புற நகர் பகுதிகளில் ஆயுர்வேத நிலையங்கள் என்ற பெயரில் இவ்வாறான விடுதிகள் இயங்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
15வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம்
புத்தளம் தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கொட்டுவ சந்தலங்காவ எட்டஒம்பகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மேற்படி சிறுமியின் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார்.
சிறுமி, தந்தை மற்றும் பாட்டியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 7 ஆம் திகதி சிறுமி திடீரென காணாமல் போனதை அடுத்து பாட்டி தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதனிடையே காணாமல் போன சிறுமி அண்மையில் திடீரென வீட்டிற்கு வந்துள்ளார். தன்னுடன் காதல் தொடர்புகளை கொண்டிருந்த ஒருவர், தன்னை கொழும்பு பிலியந்தல பிரதேசத்திற்கு அழைத்து சென்று வீடொன்றில் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்தாக சிறுமி கூறியுள்ளார்.
தனது பேத்தி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை உணர்ந்த பாட்டி சம்பவம் குறித்து தங்கொட்டுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten