காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களின் நிலை கவலைக்கிடம் இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 1000 ரூபா பணத்தால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதல் நடந்தவேளை இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதிலும் அவர்கள் சோதனைச் சாவடியில் மதுவைப் பாவித்து உச்சக்கட்ட வெறியில் இருந்துள்ளார்கள். சோதனைச்சாவடியில் இருந்த ஏனைய பொலிஸார் மோதலை தடுத்து காயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர் என மேலும் அறியப்படுகிறது. நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட 1000 ரூபாவால் தான் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முத்தியதாகக் கூறப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten