[ புதன்கிழமை, 24 யூலை 2013, 06:15.33 AM GMT ]
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வழக்கை முன்னெடுத்துச் செல்ல சட்டத்தில் இடமில்லை என தெரிவித்த நீதவான் திலின கமகே, குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹெலின் விமலா திலக்கரட்னவை வழக்கில் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
கோத்தபாயாவின் அணியும், பசில் ராஜபக்ச அணியும், நாமல் ராஜபக்ச அணியும் நாட்டின் சட்டத்தை நிர்வகித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா, மகிந்த ராஜபக்ச வெறுமனே அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக கூறினார்.
இராணுவத்திற்கான தளபாடங்களை கொள்வனவு செய்ததில் நிதி மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் மருமகனுக்கு 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வீட்டில் தங்குவதற்கு இடமளித்ததாக இந்த பெண்மணி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தனுனவுக்கு தங்க இடமளித்ததை நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை என தெரிவித்த நீதவான், அந்த சந்தர்ப்பத்தில் தனுன திலக்கரட்ன குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக இருக்கவில்லை எனவும் கூறினார்.
சரத் பொன்சேகாவின் மருமகன் அவருக்கு எதிரான வழக்கில் ஆஜராகாது இதுவரை தலைமறைவாக இருந்து வருவது குறிப்பிடதக்கது.
புத்தளம் பிரதேச சபை தலைவருக்கு நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்துள்ளது!
புத்தளம் பிரதேச சபையின் தலைவர் நிமால் பமுகுஆராச்சி என்பவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, புத்தளம் மாவட்ட நீதிபதி ரங்க திஸாநாயக்க இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
புத்தளம் - குருணாகல் வீதியில், ரயில் கடவை ஒன்றுக்கு அருகில் வைத்து வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட லொறியொன்றை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளில் ஆஜராகாததால் நீதிபதி, பிரதேச சபை தலைவருக்கு இந்த பிடிவிராந்தை பிறப்பித்துள்ளார்.
2010ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன், இது தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, பிரதான சந்தேக நபரான பிரதேச சபை தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து மரங்களை சட்டவிரோதமாக வெட்டி, அதனை கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் மரங்களுடன் கூடிய லொறியுடன் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேக நபருடன் லொறியை அதிகாரிகள் புத்தளம் மாவட்ட அலுவலகத்திற்கு எடுத்துச் சென்ற போது, வனவிலங்கு அதிகாரிகளை தாக்கி விட்டு, சந்தேக நபரையும் லொறியையும் பிரதேச சபை தலைவர் கடத்திச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதேச சபை தலைவர் மற்றும் பிறிதொரு நபருக்கு எதிராக புத்தளம் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
கோத்தா, பசில், நாமல் ஆகியோர் நாட்டை ஆட்சி செய்ய மகிந்த வேடிக்கை பார்க்கிறார்!- ஜோசப் மைக்கல் பெரேரா
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 06:42.12 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வட மேல் மாகா ண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில், மஹாவெவ நகரில் கட்சியின் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து பேசும் போது இவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசு இன்று 13வது திருத்தத்தை உடுத்தி கொண்டு, அதனை முன்வைத்து நாட்டின் பிரச்சினைகளை மறந்து வருகிறது.
எனினும் மகிந்த ராஜபக்ச அரசு வீழ்ச்சியடையும் எதிரொலியே அரசுக்குள் கேட்கிறது. 13வது திருத்தச் சட்டம் வேண்டாம் என்று கோத்தபாய கூறுகிறார்.
சம்பிக்க, விமல் போன்றவர்கள் 13வது திருத்தச் சட்டத்தை நீக்குமாறு கோருகின்றனர். ஆனால் மகிந்த இந்தியாவுக்கு வேறு ஒன்றை கூறி வருகிறார்.
நாட்டில் இன்று சில பிக்குமார் இறைச்சி கடைகளை மூடியும், அவற்றை தீயிட்டும் வருகின்றனர். இன, மத வாத பிரச்சினைகளுக்கு அடித்தளம் போட்டாகிவிட்டது.
எனினும் இவற்றை எதிர்ப்பவர்களும் அரசில் உள்ளனர். அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளை வெளியில் வந்து விமர்சிக்கும் புதுமையான அமைச்சர்கள் இருக்கும் அரசு இது.
கமத்தொழிலாளர்களையும் மீனவர்களையும் கஷ்டத்தில் தள்ளி விட்டு நுரைச்சோலை அனல் மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. இதுவரை 20 தடவைகள் அந்த மின் நிலையத்தில் வெடிப்புகள் ஏற்பட்டன.
கப்பல் செல்லாத துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. விமானம் இறங்க முடியாத விமான நிலையம் அமைக்கப்பட்டது. பறவைகள் விமானங்களின் சிறகுகளை சேதப்படுத்தி வருகின்றன.
வீதிகள் செப்பனிடப்படுகின்றன. அவற்றின் மூலம் கிடைக்கும் தரகுப் பணத்தை பற்றி எவரும் பேசுவதில்லை என தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten