[ புதன்கிழமை, 24 யூலை 2013, 06:03.36 AM GMT ]
குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாட்டை நேசிக்கும் மக்கள் வாழும் வடமேல் மாகாணத்தில், ஜனநாயக கட்சியின் பணிகளை ஆரம்பிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் தரகு வியாபாரத்தில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி வருகிறது.
மக்கள் சமாளிக்க முடியாத அளவில் பொருட்களின் விலைகள், எரிபொருள் விலைகளை அதிகரிக்கின்றனர். இது பற்றி பேசுபவர்களை தேசத்துரோகிகள் என முத்திரை குத்துகின்றனர்.
அரசியல்வாதிகளாக தம்மை இனங்காட்டி கொள்ளும் அரசாங்கத்தில் இருக்கும் சில உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டு சிறைக்கு செல்கின்றனர்.
அவர்கள் என்ன கீழ்த்தரமான தவறை செய்தாலும் அவர்களின் தலைவர்கள் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த குற்றங்களில் பிரதேச அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.
தயாசிறி ஜயசேகர ஆளும் கட்சியில் இணைகிறார்! முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவிப்பு
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 05:41.26 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று புதன்கிழமை ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதற்காக தயாசிறி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதாக தயாசிறி தெரிவித்தார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் வடமேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிடும் நோக்கில் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளராக ஐ.ம.சு.கூட்டமைப்பில் போட்டியிடுவேன்: தயாசிறி
ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று புதன்கிழமை அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வட மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(இரண்டாம் இணைப்பு)
ஐக்கிய தேசியக்கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயாசிறிய ஜயசேகர எடுக்க உள்ளதாக கூறப்பட்டு வரும் அரசியல் தீர்மானம் தொடர்பில் அவர் ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அந்த தகவல்கள் கூறின.
தயாசிறி ஜயசேகர, ஆளும் கட்சியில் இணையவுள்ளதாகவும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் ஏற்கனவே வதந்திகள் பரவியிருந்தன.
எனினும் எந்த காரணத்தை கொண்டும் தான் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள போவதில்லை என தயாசிறி ஊடகங்களிடம் கூறிவந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண, தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்டு வந்த ஓழுக்காற்று விசாரணைகளை நிறுத்துவது என அண்மையில் கூடிய அந்த கட்சியின் செயற்குழு முடிவு செய்தது.
இவ்வாறான நிலையில், தயாசிறி ஜயசேகர இன்று மாலை 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் செய்தியாளர் சந்திபொன்றை நடத்த உள்ளதாகவும் இதன் போது, அவர் எடுக்க உள்ள அரசியல் தீர்மானம் தொடர்பில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பதவியை இராஜினாமா செய்வதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் தயாசிறி
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாண சபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட போகிறேன் எனக் கூறினார்.
எதிர்வரும் வட மேல் மாகாண சபைத் தேர்தலில், தயாசிறி ஜயசேகர, ஆளும் கட்சியில் இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன.
ஆனால் அந்த செய்திகளை தயாசிறி தொடர்ந்தும் மறுத்து வந்த நிலையில், தற்போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அண்மையில், தயாசிறி ஜயசேகர எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். இதனையடுத்து, தயாசிறி ஜயசேகர மற்றும் புத்திக்க பத்திரண ஆகியோருக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த ஒழுக்காற்று விசாரணைகளை ஐக்கிய தேசியக் கட்சி இடைநிறுத்தியது.
இந்த நிலையில் அவர் கட்சி தலைமைத்துவத்துடன் சுமூக இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் அரசாங்கத்துடன் இணைய மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதனை பொய்யாக்கும் வகையில் தயாசிறி ஜயசேகர இன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை தயாசிறி ஜயசேகரவுக்கு ஆதரவு தெரிவித்து, குருணாகல் பண்டுவஸ்துவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 6 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten