[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 03:08.22 PM GMT ]
கெலினிகம என்னும் இடத்தில் இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்துவரும் வைத்தியரை இடமாற்றி, வைத்தியசாலையின் செயற்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை வடமாகாண சுகாதாரத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும் என வலி.தென்மேற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் வெ.யோண்சன் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியை தூய்மைபடுத்திய போது கைக்குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினரும் குண்டு செயலிழக்கும் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, குண்டை செயலிழக்கச் செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை சீராக இயங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 04:57.07 PM GMT ]
போதியளவான கட்டட வசதிகளுடன் உள்ள பண்டத்தரிப்பு வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் திருப்திகரமாக இல்லை என அப்பிரதேச மக்கள் குறைகூறி வருகின்றனர்.
நோயாளர் தங்குமிடம், பிரசவ அறை போன்றன வசதிகள் நிறைவாக உள்ளபோதும் அங்கு சிகிச்சைக்காகச் செல்லும் நோயாளர்கள் அனைவரும் வேறு வைத்தியசாலைக்குச் செல்லுமாறே அங்கு தற்போது கடமையில் இருக்கும் வைத்தியரினால் அனுப்பப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியிலுள்ள கர்ப்பிணித் தாய்மாரும் நோயாளர்களும் பல சிரமங்களை நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வைத்தியசாலையின் நிலைப்பாட்டை நேரில் சென்று பார்வையிட்ட வலி.தென்மேற்குப் பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் சகல பௌதீக வளங்களுடன் உள்ள வைத்தியசாலை சிறப்பாக இயங்குவதற்கு வடமாகாண சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
பண்டத்தரிப்பு வைத்தியசாலையை நேரில் சென்று பார்வையிட்டோம். பிரதேச வைத்தியசாலைக்குரிய அனைத்து பௌதீக வசதிகளுடனும் இவ்வைத்தியசாலை உள்ளது.
நோயாளர் தங்குமிடம், பிரசவ அறை, பிரசவ விடுதி, பிரேத அறை மற்றும் வைத்தியர் தங்குமிடம் என்பன சகல வசதிகளுடனும் இங்கு கட்டப்பட்டுள்ளன. தண்ணீர் வசதி, மின்சார வசதி என்பனவும் நிறைவாக உள்ளன. அத்துடன் அம்புலன்ஸ் சேவையும் உள்ளது. வைத்தியசாலைக்குரிய இயற்கையான அமைதியான சூழ்நிலையும் இங்கு காணப்படுகின்றது.
இவ்வாறு சகல வசதிகளுடனும் உள்ள இவ்வைத்தியசாலையின் வைத்தியசேவைச் செயற்பாடுகள் கடந்த சில வருடங்களாக மக்களுக்கு நிறைவாகக் கிடைப்பதில்லை என இப்பகுதி மக்கள் எம்மிடம் முறையிட்டு வந்தனர். இவ்வைத்தியசாலையில் தற்போது கடமையில் உள்ள வைத்தியர் மக்களுக்கு நிறைவான மருத்துவ சேவையை வழங்குவதில்லை என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அங்கு செல்லும் நோயாளர்கள் அனைவரும் வேறு வைத்தியசாலைக்குச் செல்லுமாறே அவரால் கூறப்படுகின்றனர்.
சிறிய நோய்களுக்காக செல்பவர்கள் கூட வேறு வைத்தியசாலைக்கே இவரால் அனுப்பபட்டு வருகின்றனர். நோயாளர்களை அதிகநேரம் காத்திருக்க வைத்து விட்டே இவர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் மக்கள் குறைப்பட்டுக்கொள்கின்றனர். இங்குள்ள வைத்தியரினால் நோயாளர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கும் ஒரு மருத்துவ மாதுவின் வேலையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வைத்தியரிடம் வைத்தியசாலையின் நிலைப்பாடுகள் தொடர்பாக நாம் கேட்க முற்பட்டபோது அவர், தனது உயர் அதிகாரிகளுடன் இது தொடர்பாக கேட்டுக்கொள்ளுமாறு பதிலளித்தார்.
எனவே மாவட்ட சுகாதாரத் திணைக்களம் இவ்வைத்தியசாலையில் கூடுதல் கவனமெடுத்து முறையாகச் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இங்குள்ள வைத்தியரை இடமாற்றம் செய்து இங்கு தங்கியிருந்து சேவையாற்றக் கூடிய வைத்தியர் ஒருவரை நியமித்து இப்பிரதேச மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சகல வதிகளுடனும் அமைதியான சூழலிலும் அமைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலை முறையாக செயற்படுமாக இருந்தால் இதனை அண்டியுள்ள மாதகல், இளவாலை, சில்லாலை, விளான், பண்டத்தரிப்பு, மாரீசன்கூடல், கீரிமலை போன்ற பிரதேச மக்கள் நிறைவான மருத்துவ சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு பிரதேச வைத்தியசாலைகளை பொறுப்புடைய அதிகாரிகள் கவனமெடுத்து செயற்படுத்துவதன் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுவரும் சனநெருக்கடியையும் நிவர்த்தி செய்து கொள்ளமுடியும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten