[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 02:17.37 PM GMT ]
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் கொலை வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை அச்சுறுத்த வேண்டாம் என விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின், மனைவி சியாமலி பெரேரா இன்று நீதிமன்றில் ஆஜரானார்.
அச்சுறுத்தல் குற்றச்சாட்டை அடுத்து விடுக்கப்பட்ட அழைப்பாணையின் பேரிலேயே அவர் நீதிமன்றில் ஆஜரானார்.
அச்சுறுத்தல் குற்றச்சாட்டை அடுத்து விடுக்கப்பட்ட அழைப்பாணையின் பேரிலேயே அவர் நீதிமன்றில் ஆஜரானார்.
எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் அன்று உத்தரவிட்டிருந்தார். எனினும் அன்றைய தினம் தன்னால் நீதிமன்றுக்கு சமுகமளிக்க முடியாது என சியாமலி பெரேரா இன்று நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணியுடன் ஆஜரானார்.
அதனையடுத்து சியாமலி பெரேராவை கடுமையாக எச்சரித்து நீதவான் விடுதலை செய்தார்.
மாகாணங்களுக்கு காவற்றுறை அதிகாரம் வழங்கினால் நாட்டில் பிரிவினை வாதம் ஏற்படும்! கோத்தபாய
[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 01:47.15 PM GMT ]
13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் பல விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் முதலமைச்சர்களினால் நிர்வகிக்கப்படும் மாகாணங்களிலும் 9 காவற்துறைகள் உருவாகும்.
இந்த காவற்துறை நிலையங்களின் நேரடியான நிர்வாகம் காவற்துறை மா அதிபரிடம் இருந்து மாகாண முதலமைச்சரின் கைகளுக்குள் செல்லும். முதலமைச்சரின் கீழ், பிரதிக்காவற்துறை மா அதிபர் ஒருவர் மாகாண காவற்துறையை நிர்வகிப்பார்.
அத்துடன் நாட்டில் காவற்துறைக்கு ஆட்சேர்ப்பு மாகாணத்திற்குள்ளேயே மேற்கொள்ளலாம் என்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இனரீதியான காவற்துறை நிலையங்கள் உருவாக வழியமைக்கும்.
எனினும் இந்த மேற்கூறப்பட்ட நிலைமைகள் நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும்.
அதேவேளை மாகாண சபையின் காவற்துறைக்கு பொறுப்பாக இருக்கும் பிரதிக் காவற்துறை மா அதிபர் ஒருவர், கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு கூட மாகாண முதலமைச்சரிடம் தான் அனுமதி பெற வேண்டும்.
அத்துடன் அவருடைய குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதா இல்லையா என்பது குறித்தும் முதலமைச்சரின் விருப்பத்துடனேயே இடம்பெறும்.
இதன் மூலம் காவற்துறையினரின் ஒழுக்கம், சட்டத்தை பாதுகாக்கும் காவற்துறை மா அதிபரின் அதிகாரம் இல்லாமல் போய்விடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten