[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 12:18.59 PM GMT ]
தொழில் ஏற்பாடுச்செய்து தருவதாக கூறி 3 இலங்கையர்களிடமிருந்து பணம் பறித்த மற்றுமொரு இலங்கையரை பட்டாய தாய்லாந்து பொலிஸார் செவ்வாய் அதிகாலை கைதுச்செய்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் குஹூனு சொன்டாயா என்பவர் பாதையில் உணவிற்காக பிச்சையெடுத்துக்கொண்டிருந்த 3 இலங்கையர்களை தாய்லாந்து பட்டாய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.
இவ்வாறு அழைத்துவரப்பட்ட 3 இலங்கையர்களுமே தாய்லாந்தில் பாதுகாவலர்களாக தொழில்புரியும் பொருட்டே அழைத்துவரப்பட்டுள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இம்மூவரும் இலங்கையருக்கு பணம் செலுத்தியுள்ளனர். சுனில் உதயகுமார(38) என்பவர் 174 000 பாட் இவர்களிடத்தே அறவிட்டுள்ளார். 10 000 பாட் மாத வருமானம் பெற்றுத்தருவதாகவும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சொய் பகுதியிலுள்ள ஓர் மாடி வீட்டில் இவர்களது தொழில் ஆவணங்கள் தயாரிக்கப்படும் வரை தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தவிர சுனில் இவர்களிடத்தே விஜயம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஆவணங்கள் தயார் செய்வதற்காக மேலதிக பணத்தினை இம்மூவரிடத்தே அறவிட்டுள்ளார். இறுதியாக கையில் பணமற்ற நிலையில் இம்மூவரும் உள்ளூர்வாசிகளிடம் பண உதவி கேட்டுள்ளனர்.
இம்மூவரும் எவரேனும் ஒருவரால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என அறிந்த குஹூனு சொன்டாயா பொலிஸாரிடம் அழைத்துச் சென்றதுடன் பொலிஸாரின் உதவியுடன் சுனிலையும் கைதுச்செய்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான ஒருங்கிணைப்புக்குழுவை நியமிக்க அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் இணக்கம்!
[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 03:27.07 PM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் விசேட கூட்டம், கொழும்பில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5.15 மணியிலிருந்து இரவு 7.30 வரை நடைபெற்றது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஜனநாயக ரீதியாக ஒரு சக்திமிக்க ஸ்தாபனமாக பலப்படுத்துவதற்கான வாதப் பிரதிவாதங்களே கூட்டத்தில் அதிகளவில் இடம்பெற்றதோடு, வடமாகாணசபை தேர்தல் தொடர்பாக கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்றுள்ளன.
கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் நீண்ட காலமாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக இன்றைய கூட்டத்தில் ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கி ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 3 நபர்களை உள்ளடக்கிய 15 பேரைக்கொண்ட கூட்டமைப்புக்கான ஒருங்கிணைப்புக்குழுவை நியமிப்பதென ஒருமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்புக்குழுவுக்கு மேலதிகமாக நிதிக்குழுவையும், தேர்தல் குழுவையும் நியமிப்பதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை.சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியும், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சார்பில் அதன் செயலாளர் சுரேஸ் க.பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், புளொட் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன், பவான், ராகவன் ஆகியோரும், ரெலோ அமைப்பின் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் கென்றி மகேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten