[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 11:42.58 AM GMT ]
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் திகதி எட்டியாந்தோட்டை கல்பாத்த பிரதேசத்தை வசித்த 22 வயதான தீபிகா சுபாஷினி என்ற ஆடை தொழிற்சாலை வேலை செய்த யுவதியை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அத்துடன் யுவதியின் தங்க சங்கிலி, கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையிட்டதாக தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் எட்டியாந்தோட்டை கந்தேவத்தை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான முருகையா சந்திரமோகன் என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர இரண்டு குற்றங்களுக்காக தலா 10 ஆண்டுகள் என இருபது ஆண்டு சிறைத்தண்டனையும், இரண்டு குற்றங்களுக்காக தலா 10 ஆயிரம் ரூபா அபராதம் என 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
கொலை செய்த குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இராணுவத்தினருக்கு கரும்புலி தினக் காய்ச்சல்! வடமராட்சியில் கறுப்பு கொடி கட்டுவதற்கு தடை: பொது மக்களுக்கும் அச்சுறுத்தல்
[ வியாழக்கிழமை, 04 யூலை 2013, 12:32.15 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு வடமராட்சி பகுதியில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வல்வெட்டித்துறையில் தற்கொலை செய்து கொண்டுள்ள முச்சக்கரவண்டி சாரதியொருவருக்காக, துக்கத்தை அனுசரிக்கும் பொருட்டு அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த கறுப்பு கொடிகளை இராணுவத்தினர் அகற்றியுள்ளனர்.
இதனைத் தட்டிக் கேட்டவர்களையும் இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற எம்.கே. சிவாஜிலிங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்த இராணுவத்தினருடன் சமரசம் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் இராணுவ பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு ரோந்துப் பணிகளும் இராணுவத்தினரால் மூடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை அண்மித்த பகுதிகளில் இராணுவப் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten