[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 05:46.44 PM GMT ]
இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண கம்பன் கழகமானது பல ஆண்டுகளாக தமிழை வளர்ப்பதற்காக செயற்பட்டுவருவதாக யாழ் பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை தமது பிள்ளைகளை அநாதவராக கைவிட்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
யாழில் தமிழை வளர்க்கும் கம்பன் கழகம்: யாழ் பிரதேச செயலர் - நல்லாட்சி மன்ற பிரஜைகள் குழு யாழ் இன்று விஜயம்
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 04:57.57 PM GMT ]
நேற்றைய தினம் யாழ்ப்பாணக் கம்பன் கழகம் நடாத்திய நிலாக் கால நிகழ்வில் தலைமை உரை ஆற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
நிகழ்வில் தொடர்ந்து தலைமையுரையாற்றிய யாழ் பிரதேச செயலர் யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுப் படையெடுப்பின் போது சமயமும் தமிழும் அழிக்கப்பட்ட போது ஆறுமுகநாவலர் தோன்றி சமயத்தையும் தமிழையும் வளர்ப்பதற்காக பெரும்பாடுபட்டவர் எனக் குறிப்பிட்டார்.
அன்றைய காலத்தில் செந்தமிழ் வளர்த்த யாழ்ப்பாணமும், பண்பாட்டில் சிறந்து விளங்கிய யாழ்ப்பாணமும் காணப்பட்டது.
பின்னர் ஏற்பட்ட போர்ச்சூழல், இடப்பெயர்வு மற்று பல காரணிகள் கலாச்சாரம் மற்றும் மொழி, சமயங்கள் ஆகியவற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த யாழ் பிரதேச செயலர் இந்த மாற்றங்களால் சில ஆண்டுகளில் எங்களுடைய தமிழ் இனம் இருந்ததென்ற வரலாறு இல்லாமல் போகக்கூடிய சூழல் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எங்களுக்குத் தரப்பட்ட பண்பாடு, கலாச்சாரங்களை இளைய தலைமுறைக்கு பழைய வரலாற்றை வழங்காது தவறவிட்டுக் கொண்டு செல்லவதாக குற்றம் சாட்டினார்.
நிகழ்வில் வரவேற்புரையை லோ.துசிகரன் ஆற்றியதுடன், நிலக் கால நிகழ்வில் பட்டிமன்றம் நடைபெற்றது.
நல்லாட்சி மன்ற பிரஜைகள் குழு யாழ் இன்று விஜயம்
நல்லாட்சி மன்ற பிரஜைகள் குழு யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளனர்.
வடமாகாணத்திற்கான சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டுள்ள நல்லாட்சி மன்ற பிரஜைகள் குழு, இன்று நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களை பிரதேச சபையில் வைத்து சந்தித்தனர்.
நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் பி.வசந்தகுமார் தலைமையில் நல்லூர் பிரதேச சபையில் நடைபெற்ற சுற்றுலா சந்திப்பில்
தென்னிலங்கை பகுதி பிரதேச சபை பகுதிகளின் தலைவர்கள், நகர சபை உறுப்பினர்கள் உட்பட பிரஜைகள் குழுத்தலைவர் சிராணி ஜெயசுந்தரம், செயலாளர் மே.சாந்தசீலன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வில் கருத்துவெளியிட்ட நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் பி.வசந்தகுமார் யாழ் மாவட்டத்திலுள்ள ஒன்பது பிரதேச சபைகளும் சேர்ந்து நல்லெண்ண விஜயமாக தென்னிலங்கைக்கு சென்றிருந்ததாகவும், இவ் ஒழுங்கை நல்லாட்சிக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தாக தெரிவித்தார்.
நுவரெலியா, பதுளை, யக்கலமுல்ல, பசற போன்ற பிரதேச சபைகளைப் பார்வையிட சென்றிருந்ததாகவும், அங்குள்ள பிரதேச சபைகளின் செயற்திட்டங்களை விளங்கிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் உள்ளுராட்சி மன்றங்களின் கடமைகள் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் பி.வசந்தகுமார் அவர்களுடனான சந்திப்பின் போது தமிழ் மக்களுடைய உணர்வுகள், பிரச்சினைகள், உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்றும், இதனை அரசாங்கத்திற்கு எடுத்துக்கூற வேண்டும் என்றும் தாம் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார்.
மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிங்கள மக்களுக்கோ, முஸ்லீம் மக்களுக்கோ எதிரானது அல்ல எனவும், மக்கள் சமாதானமாக வாழ விரும்புவதனையும் நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டுள்ள நல்லாட்சி மன்ற பிரஜைகள் குழுவிடம் சுட்டிக்காட்டியதாக நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் பி.வசந்தகுமார் மேலும் தெரிவித்தார்.
பட்டிமன்றத்திற்கு கம்பவாரிதி இ.ஜெயராஜ் நடுவராகக் கடமையாற்றினார்.
பட்டிமன்றத்தில் இன்று பாரதி வந்தால் எதனைப் பெரிதும் வலியுறுத்துவான் என்ற கருத்தில் பெண் விடுதலை என்பது குறித்து இரா செல்வவடிவேல், லலீசன் ஆகியோரும், மொழிப்பற்று என்பது குறித்து வியஜசுந்தரம் மற்றும் வாசுதேவா ஆகியோரும், சமுதாய உணர்வை என்பது குறித்து ஸ்ரீபிரசாந்தன், மணிமாறன் ஆகியோர் வாதிட்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten