[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 04:05.59 PM GMT ]
சி.வி. விக்னேஸ்வரனின் வரலாறு, குடும்பப் பின்னணி மற்றும் கல்விப் பின்னணி ஆகியவற்றைப் பார்க்கும் போது அவர் ஒருபோதும் இனவாதத்துக்கு அடிபணியமாட்டார் என்பது தெளிவாகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் முதலமைச்சராக வருவதன் மூலம் ஒருபோதும் நாடு பிளவுபட மாட்டாது. தமிழ் மக்களின் கோணத்திலிருந்து பார்க்கும் போது அவர் ஒரு மத்தியஸ்தமான மனிதராக இருக்கின்றார்.
அவரின் நேர்காணல்களை நான் அண்மையில் வாசித்துப் பார்த்தேன். தமிழ் மக்களின் ஜீவனோபாய மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். மாறாக அரசியல் போராட்டத்தை கட்சி முன்னெடுக்கும் என்பதே அவரின் நிலைப்பாடாக உள்ளது.
சி.வி. விக்னேஸ்வரன் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். சிங்கள சமூகத்துடன் ஈடுபாட்டுடன் செயற்படுகின்றார். அவரின் குடும்பமும் சிங்கள மக்களுடன் உறவு வைத்துள்ளது.
அந்த வகையில் விக்னேஸ்வரனின் வரலாறு குடும்ப பின்னணி மற்றும் படிப்பு ஆகியவற்றை பார்க்கும் போது அவர் ஒருபோதும் இனவாதத்துக்கு அடிபணிய மாட்டார் என்பது தெளிவாகின்றது.
அதனால் அவரின் வருகையினால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று தென்னிலங்கையில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டே மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இணைந்து செயற்பட அவர் எந்தளவு தூரம் ஆர்வமாக இருக்கின்றார் என்பதும் தெளிவாகின்றது என்றார்.
பிறந்த நாட்டுக்கு எவரும் துரோகம் இழைக்கக் கூடாது!– ஜனாதிபதி - தமிழக மீனவர்களை பேச்சுக்கு வருமாறு மகிந்த அழைப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 03:21.01 PM GMT ]
பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டை சீர்குலைப்பதற்கு எவரும் முயற்சிக்கக் கூடாது. எவரும் பிறந்த நாட்டுக்கு துரோகம் இழைக்கக் கூடாது.
எதிர்க்கட்சிகள் எதிர்கல சந்ததியினரது நன்மைகளை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பியகம குடிநீர்த் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களை பேச்சுக்கு வருமாறு மகிந்த அழைப்பு!
தமிழ்நாட்டு மீனவர்களுடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மீன்பிடித் திணைக்கள ஆலோசகரான அந்தோனிமுத்துவிடமிருந்தே இந்த அழைப்பிதழ் வந்திருப்பதாகவும் இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten