தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 juli 2013

சிவில் உடையில் வீடு புகுந்து இராணுவத்தினர் தாக்குதல்! இருவர் காயம்: வடமராட்சியில் சம்பவம்!

மூன்று மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல்- நீதவான்களின் தீர்ப்புக்கள் குறித்து மீளாய்வு செய்ய வேண்டும்
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 02:41.22 AM GMT ]
வடக்கு, வடமத்திய, மத்திய மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான வேட்பு மனுத்தாக்கல்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.
இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி 12 மணி வரை அரசியல் கட்சிகள் தமது மனுக்களை தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி மதியம் 12 மணிவரை சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தினை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தேர்தல் இடம்பெறும் தினம் குறித்து தேர்தல்கள் செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்படும்.
வேட்பு மனுத்தாக்கல்களின் போது குறிப்பாக வட பிராந்திய தெரிவத்தாட்சி காரியாலங்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் நீதவான்களின் அளித்த தீர்ப்புக்கள் குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் - எஸ்.எம். சந்திரசேன
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நீதவான்கள் கடந்த காலங்களில் அளித்த தீர்ப்புக்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டுமென பிரதிப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அளித்த வழக்குத் தீர்ப்புக்கள் குறித்து மீளாய்வு செய்ய வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரியுள்ளேன்.
தேர்தலில் போட்டியிடும் நீதவான்கள் நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் அளித்த தீர்ப்புக்களில் அரசியல் நடவடிக்கைகள் கலந்திருக்கலாம்.
ஓர் கட்சியில் வேட்பாளராக போட்டியிட வேண்டுமாயின் நீண்ட கால அடிப்படையில் அந்த கட்சியுடன் தொடர்புகளைப் பேண வேண்டியது அவசியமானது.
சில நீதவான்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதன் மூலம் இந்த விடயம் புலனாகியுள்ளது என பிரதி அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

சிவில் உடையில் வீடு புகுந்து இராணுவத்தினர் தாக்குதல்! இருவர் காயம்: வடமராட்சியில் சம்பவம்
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 03:07.53 AM GMT ]
யாழ்.வடமராட்சிப் பகுதியில் வீடொன்றில் நுழைந்த சிவில் உடை தரித்த இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் வயோதிபர் ஒருவர் உட்பட இருவர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் 4 மணியளவில் கரவெட்டி இராஜசிங்கம் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வின் போது பாடல் ஒலித்துக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே நுழைந்த இராணுவத்தினர் அங்கு நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இன்னொரு இளைஞரை நிர்வாணப்படுத்தி ஆண் உறுப்பில் தாக்கியுள்ளனர். அதனை அவரது பேத்தியார் தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கியுள்ளனர்.
பின்னர் வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட சாதனங்களையும் அடித்து நெருக்கி விட்டு அவர்கள் சென்றுள்ளனர்.
இத்தாக்குதலில் மோகன் நிரோஜன் (வயது 21) , இராசேந்திரம் சிவப்பி (வயது 62) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten