தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 juli 2013

கொக்கோஸ் தீவுக்கருகில் கடலில் தத்தளிக்கும் இலங்கை அகதிகள் படகு! உதவுமாறு அவசர கோரிக்கை

பிரித்தானியாவில் வீசா இன்றி வேலை செய்த இலங்கையர் மூவரை நாடுகடத்த ஏற்பாடு!
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 05:38.48 PM GMT ]
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று இலங்கையர்கள் உட்பட இந்தியன் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய உள்துறை அலுவலக குடிவரவு அமுலாக்க அதிகாரிகள் மற்றும் ஹள், கொட்டிங்கம் பகுதி பொலிஸாரின் உதவியுடன் இவர்கள் கைதாகியுள்ளனர்.
22, 23, மற்றும் 27 வயதுடைய இலங்கை இளைஞர்கள் மூவர் வீசா முடிவடைந்த நிலையில், கடைகளில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்துள்ளனர்.இதன்போதே குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மேற்படி வீசாவின்றி தங்கியிருந்து சட்டவிரோதமாக வேலை செய்த மூவரையும் உடன் நாடுகடத்த வேண்டும் எனவும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இம் மூவருடன் கைதான 33 வயதுடைய இந்திய நபர் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியாவில் வீசா இன்றி சட்டவிரோதமாக வேலைசெய்வோரைக் கைது செய்தால் அவர்களிடம் இருந்து 20000 பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வீசா இல்லாதோரை வேலைக்கு அமர்த்தியிருப்பின் அலுவலக / கடை உரிமையாளருக்கு குடிவரவு அதிகாரிகளினால் தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது.
கிழக்கு யோர்க்‌ஷேர் பகுதியில் பிரித்தானிய குடிவரவு குடியகல்வுப் பிரிவினரால் தொடர்ந்து இவ்வாறான தேடுதல்கள் நடாத்துவதற்கென பிரத்தியேகமாக சில அதிகாரிகளை அமர்த்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய ஆங்கில இணையத்தளச் செய்திகள் தெரிவித்துள்ளன.
மேலும் கடந்த 10ம் திகதியும் இவ்வாறு திடீர்ச் சோதனையால் இரு இலங்கையர் கைதாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொக்கோஸ் தீவுக்கருகில் கடலில் தத்தளிக்கும் இலங்கை அகதிகள் படகு! உதவுமாறு அவசர கோரிக்கை
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 04:38.25 PM GMT ]
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அவுஸ்திரேலியா சென்ற படகு, கொக்கோஸ் தீவுக்கு 40கடல் மைல் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் பயணித்தவர்கள் தம்மை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவிலுள்ள அவர்களது உறவினர்களுக்கு சட்லைட் தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த படகு சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னர் 60 பயணிகளுடன் முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. எனினும் இதுவரை காலமும் எந்தவிதமான தகவல்களும் கிடைத்திராத நிலையில், இன்று மாலை படகிலுள்ளவர்கள் தமது உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
படகிலுள்ள 60 பயணிகளில் நான்கு கர்ப்பணி தாய்மார்களும் ஒன்பது சிறுவர்களும் உள்ளதாகவும், இரண்டு, மூன்று தடவைகள் விமானம் தம்மை வட்டமிட்டுச் சென்றதாகவும் எனினும் தம்மை காப்பாற்ற அவுஸ்திரேலிய கடற்படை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
உணவு மற்றும் எரிபொருள் முற்றாக தீர்ந்து போன நிலையில் தொடர்ந்தும் பயணிக்க முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் அவர்கள் தமது உறவினர்களுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten