தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 juli 2013

ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்!- கரு ஜெயசூரிய- ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர் குறித்து சந்தேகம்

சுற்றுலா வீசாவில் வந்து வியாபாரம் செய்த இரு இந்தியர்கள் கைது- அவுஸ்திரேலிய செல்ல முற்பட்ட கும்பல் ஹம்பாந்தோட்டையில் கைது
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 02:16.52 AM GMT ]
சுற்றுலா விசாவில் வந்து இலங்கையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்தியர்கள் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் மற்றும் மருதநகர் ஆகிய இடங்களில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் இன்று வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.
அவுஸ்திரேலிய செல்ல முற்பட்ட கும்பல் ஹம்பாந்தோட்டையில் கைது
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட கும்பல் ஒன்று ஹம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படகிறது.
ஹம்பாந்தோட்டை விடுதியொன்றில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகமானவர்கள் 20 முதல் 24 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக பன்னிரெண்டு பேரை கைது செய்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமத்திற்கு செல்ல வந்ததாகவே இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், விசாரணைகளின் போது கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்லவே இவர்கள் விடுதியில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்!- கரு ஜெயசூரிய- ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர் குறித்து சந்தேகம்
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 02:07.44 AM GMT ]
தமக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகள் இருந்தாலும் அதனை நீக்கும வகையில் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
தமது ஒரே நோக்கம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதே என்று கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கரு ஜெயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரை ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பிலேயே கரு ஜெயசூரியவின் கருத்து வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஜனநாயக விரோத அரசாங்கத்துக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி ஒன்று இல்லை என்பதையும் கரு ஜெயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர் குறித்து சந்தேகம்- ஐ.தே.க
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் விதம் தொடர்பாக கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை தருகின்றமை சந்தேகத்திற்குரியது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களை மீளக் குடியமர்த்தாது தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு எதிர்ப்பை வெளியிடுவதாக தேசிய பிக்கு சம்மேளனம் மீண்டும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் வாக்கு விகிதாசாரம் பாதிக்கப்படும் என்ற அந்த சம்மேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten