தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juli 2013

வவுனியாவில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பல்கலை. மாணவன்

இராணுவத்தினரைக் கொன்று எரித்த புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு- விசா இன்றி தங்கியிருப்போரை கைது செய்ய நடவடிக்கை
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 02:55.32 AM GMT ]
இராணுவத்தினர் 26 பேரைச் சுட்டுக் கொன்று பின்னர் சடலங்களை எரித்த இரண்டு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சுலக்ஷன் மதராயன் மற்றும் தர்ஷன் கணேசன் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு விக்டர் என்னும் புலிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 இராணுவப் படைவீரர்கள் மற்றும் எட்டு கடற்படையினர் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொலை செய்த படைவீரர்களின் சடலங்களை புலி உறுப்பினர்கள் தீயிட்டு கொளுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு புலி உறுப்பினர்களையும் விடுதலை செய்ய பல அரசியல்வாதிகள் முயற்சித்துள்ளதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு புலி உறுப்பினர்களுக்கு எதிராகவும் வவுனியா நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
விசா இன்றி தங்கியிருப்போரை கைது செய்ய நடவடிக்கை
விசா இன்றி தங்கியிருப்போரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குடிவரவு திணைக்களத்தின் புனலாய்வுப் பிரிவினர் இந்த விசேட தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த தேடுதல் வேட்டையின் ஒர் கட்டமாக கடந்த இரண்டு தினங்களில் கண்டி மற்றும் மாத்தளை பிரதேசத்தில் விசா அனுமதியின்றி தங்கியிருந்த பதினைந்து வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டுக்கு எதிராக செயற்படுவோர், வெளிநாட்டு உளவாளிகள், அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் வெளிநாட்டுப் பிரஜைகளும் இவ்வாறும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்போரை கைது செய்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இலங்கை குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வவுனியாவில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பல்கலை. மாணவன்
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 03:18.19 AM GMT ]
வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் விசாரணைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கடுமையாக தாக்கப்பட்டு, சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒரு மாத காலத்திற்குப் பின்னர் உறவினர்களினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைக்கழக மாணவனும், முன்னாள் போராளியுமான தேவராசா பிரதீபன் (வயது26) என்ற குறித்த இளைஞர் கடந்த மாதம் 15ம் திகதி வீட்டிலிருந்த சமயம் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து மூன்று தினங்களின் பின்னர் அதே நபர்களினால் வீட்டில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளார்.
விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டிருந்த 3 தினங்களில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுட ன் சூடேற்றிய இரும்பு கம்பிகளால் சூடப்பட்டும், சிகரட்டினால் சுடப்பட்டும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து உறவினர்கள் மிகுந்த அச்சத்தினால் விடயத்தை அப்படியே மூடிமறைத்துள்ளனர்.
இதேவளை குறித்த இளைஞர் திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தை எனவும், முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வுக்குட்படுத்தப்படாமல், குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கிராமத்தில் அயலவருடன் ஏற்பட்ட தகராறையடுத்தே விசாரணைக்கு இனந்தெரியாத நபர்கள் அழைத்துச் சென்று தாக்கி, சித்திரவதை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten