[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 02:51.45 AM GMT ]
இது தொடர்பில் வெளிநாட்டு அரசாங்கங்கள் உரிய கவனத்தை செலுத்தவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தேர்தல் கண்காணிப்பாளர்களை கொண்டுவருமாறு அரசாங்கத்திடம் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய உறவுகள் குழுவிடம், வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் பல தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
எனினும் சில நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்வதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இது தொடர்பில் குறித்த நாடுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்களை அழைக்குமாறு பவ்ரல் கோரிக்கை
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 01:42.02 AM GMT ]
ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் உள்ளதால் அவர்கள் கருத்துக்கு கூடிய நம்பகத்தன்மை இருக்கும்.
இதன் காரணமாகவே அவர்களை மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளோம் என பவ்ரல் அமைப்பின் தலைவர் ஜெஸிமா இஸ்மெயில் தெரிவித்தார்.
இதேவேளை, சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பைச் சேர்ந்த பங்களாதேஷ், நேபாளம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் 10 பேரை பவ்ரல் அழைக்கவுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் றோகன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்களை அழைப்பதை தான் நிராகரிக்கவில்லையெனவும் றோகன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten