தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juli 2013

அவுஸ்திரேலிய நாவுறு தீவில் கலவரம்! இலங்கையர்களே அதிகளவில் ஈடுபாடு: அவுஸ்திரேலிய ஊடகம்!

மலேசிய பிரதமர் இலங்கை மாநாட்டை பகிஸ்கரிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கோரிக்கை
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 03:41.58 AM GMT ]
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மலேசிய பிரதமர் பகிஸ்கரிக்க வேண்டும் வேண்டும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஏற்கனவே மலேசியாவில் இடம்பெற்ற இஸ்லாமிய மாநாட்டுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அது பலத்த எதிர்ப்புக்களால் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் இலங்கையில் சிறுபான்மை தமிழர்களின் முஸ்லிம்களின் வணக்கத்தலங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை தடுக்க இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.
எனவே இதனைக் கருத்திற் கொண்டு மலேசிய பிரதமர் பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று குலசேகரன் மலேசிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலிய நாவுறு தீவில் கலவரம்! இலங்கையர்களே அதிகளவில் ஈடுபாடு: அவுஸ்திரேலிய ஊடகம்
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 03:32.07 AM GMT ]
அவுஸ்திரேலியா நாவுறு தீவு அகதிகள் முகாமில் நேற்று இரவு பாரிய கலவர நிலை தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிசி செய்திசேவையின் தகவல்படி, பெரும்பாலான இலங்கையர்கள் உட்பட்டவர்கள், அங்கு கடமையில் இருந்த பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் 50 பேர் வரை நேற்றிரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மற்றும் ஒரு செய்தியின்படி சுமார் 500 அகதிகள் தப்பிச் செல்வதற்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை அகதிகள் தமது கலவத்தை ஆரம்பித்தனர். இரண்டு மணித்தியாலங்களுக்குள் அவர்கள் நாவுறு அகதி முகாமின் மத்திய பகுதியை கைப்பற்றினர்.
இதன்போது அவர்கள் கத்தி, கம்பு உட்பட்ட பல ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர். அத்துடன், அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த புதிய மருத்துவமனை உட்பட்ட கட்டிடங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர்.
இந்த சம்பவத்தின்போது சுமார் 15 பொலிஸார் காயமடைந்தனர். முகாமில் உள்ள இரண்டு இலங்கையர்கள் நேற்று தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த சம்பவங்களை அடுத்தே இந்த கலவரநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வருபவர்கள் நேரடியாக பப்புவா நியுகினிக்கு அனுப்பப்படுவர் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது.

நவுறு அகதி முகாமில் தீ விபத்து!
இலங்கை அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நவுரு தீவின் முகாமில் வன்முறையில் ஈடுபட்ட அகதிகள், முகாமின் ஒரு பகுதிக்கு தீ மூட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் முகாமின் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், அதன் மருத்துவமனை ஒன்று முழுமையாக தீக்கிறையானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் சுமார் 150 அகதிகள் வரையில் ஈடுபட்டதாக முகாமின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து படகு மூலம் வருகின்ற அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவுக்குள் இடமளிக்க முடியாது என்று அந்த நாட்டின் பிரதமர் கெவின் ரட் அறிவித்த சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வன்முறையை கட்டுப்படுத்த நவுரு தீவின் பொது மக்களும் காவற்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கிய போதும், அவர்களும் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் நான்கு அதிகளும், மேலும் சில பாதுகாப்பாளர்களும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் 60 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

Geen opmerkingen:

Een reactie posten