அரசும் புலிகளும் இணைந்துவிட்டதாக அரங்கேறும் நாடகம் !
04 July, 2013 by admin
போருக்கு பின்னர், சரணடைந்த விடுதலைப் புலிகளின் பிரமுகர்களையும் மற்றும் முக்கிய போராளிகளையும் இலங்கை அரசு தன்னுடன் இணைத்துக்கொள்வது போன்றதொரு தோற்றப்பட்டை வெளிப்படுத்தி வருகிறது. இது மிகவும் தவறான செய்தி ஒன்றை தமிழ் மக்களிடையே புகுத்திவருவதை அவதானிக்க முடிகிறது. தாம் காட்டில் இருப்பதாகவும் இலங்கை அரசுக்கு எதிராகப் போராட இருப்பதாகவும் கூறிவந்த ராம் மற்றும் நகுலன் போன்றவர்கள், ஏற்கனவே இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து இருந்தார்கள். தமிழ் மக்களுக்கு பிழையான செய்திகளைப் பரப்பி, இவர்கள் புலம்பெயர் தமிழர்களிடம் பணத்தையும் கொள்ளையடித்தார்கள். இறுதியில் பகிரங்கமாக திருமணம் முடிக்கிறார்கள். ஒரு முன் நாள் போராளி திருமணம் முடிப்பது என்பது பெரியவிடையமே அல்ல. ஆனால் அவர் காட்டில் மறைந்திருப்பதாகச் சொல்வதும் போராட இருப்பதாகச் சொல்வதுமே தவறான விடையங்களாக கருதப்படுகிறது.
புலம்பெயர் மக்களிடையே நம்பிக்கையை ஊட்டி, பின்னர் கவுக்கும் வேலையில் தான் இவர்களை இலங்கை இராணுவம் பயன்படுத்தி இருகிறது. நகுலன் திருமணம் முடித்துவிட்டார் என்ற செய்தியை அதிர்வு இணையம் வெளியிட்ட பின்னர் , எமக்கு பல மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக நகுலன் மற்றும் ராம் தாம் காட்டில் உள்ளதாகவும், போராட இருப்பதாகவும் கூறி புலம்பெயர் தமிழர்களிடம் பணத்தை கறந்த வேளை , அப் பணத்தை லண்டன் , ஜேர்மனி, சுவிஸ் போன்ற நாடுகளில் சேகரித்த நபர்கள் குறித்த விபரங்கள் எம்மால் திரட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த சுத்துமாத்துக்காரர்கள் பல ஆயிரம் பவுண்டுகளை புலம்பெயர் மக்களிடம் பெற்றுள்ளார்கள். அதனை நகுலனுக்கு அனுப்பிவைத்தார்களோ என்னமோ தெரியவில்லை. ஆனால் நகுலன் கலியாணம் கட்டிவிட்டார் என்ற கசப்பான செய்தியை மட்டும் இவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
எங்கே பணம் கொடுத்த தமிழர்கள் அதனை திருப்பிக் கேட்டுவிடுவார்களோ என்று நினைத்து, செய்தி வெளியிட்ட ஊடகங்களைச் சிலர் கடிந்துகொள்கிறார்கள். இவர்கள் குறித்த செய்திகளும் இனிவருங்காலங்களில் வெளியிடப்படவுள்ளது. கருணா , தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர், நகுலன், ராம் போன்றவர்கள் நல்லவர்கள் அவர்கள் வல்லவர்கள், இனியும் அவர்களால் தான் போராட்டம் வெடிக்கும் என்றுசொல்லி புலம்பெயர் நாடுகளில் சிலர் பூச்சாண்டி காட்டுக்கொண்டு அலைந்து திரிகிறார்கள். அவர்கள் புகைப்படம் அடங்கலாக பல செய்திகள் விரைவில் எம்மால் வெளியிடப்படும். அவர்களோடு தொடர்புடையவர் யாவர், அவர்கள் யாரிடம் எவ்வளவு பணத்தை போராட்டம் தொடங்கப்படும் என்று சொல்லி வாங்கினார்கள் என்பது போன்ற விடையங்கள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை விரைவில் எதிர்பார்க்கலாம்.
புலிக்கொடியுடன் ஓடியவருக்கு பிடியாணை: ஒரு பொய்யான செய்தி !
04 July, 2013 by admin
குறிப்பிட்ட இந்த இளைஞருக்கு எதிராக கொழும்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், இதனால் சர்வதேசப் பொலிசார் இந்த இளைஞரை தேடிவருவதாகவும் சில இணையத்தளங்களிலும் மற்றும் தொலைக்காட்சியிலும் செய்தி வெளியாகியிருந்தது. ஒரு மைதானத்துக்குள் கொடியுடன் ஓடினால் சர்வதேசப் பொலிசார்(இனரர் போல்) தேடுவார்களா என்ன ? இது எந்த ஊர் நியாயம் ? இன்ரர் போல் பொலிசாரின் இணையத்தளப் பக்கத்தில் மேற்குறிப்பிட்ட இளைஞரது விபரங்கள் தேடப்படும் பட்டியலில் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten