[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 12:58.45 AM GMT ]
1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆழ்ந்த கவலை கொள்கின்றேன் என கனடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்தார்.
1983 ஜூலை 23 ம் தேதியில் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும் இடம்பெயர்ந்து அடித்தும் துரத்தப்பட்டனர்.
மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அழிக்கப்பட்டன.
இந்த கொடூரமான நடவடிக்கைகள் மற்றும் இதயம் நொறுங்கும் இழப்பு விளைவுகளை இன்னும் இலங்கையில் வாழும் தமிழர்கள் போல் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மூலம் உணர்கின்றேன்.
புதிய ஜனநாயக கட்சி இலங்கையின் சிறுபான்மை சமூகங்களின் நடவடிக்கை பற்றி கவலை அடைகின்றது.
கறுப்பு ஜூலை 23, 1983 நினைவு கொள்ளும் அதேநேரம் எமது பொது சபை தமிழ் கனடியர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் செயற்படுவோம்.
நாங்கள் கனடிய அரசாங்கத்தினை உறுதியான இராஜதந்திர நடவடிக்கை எடுக்குமாறும், இந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அரசு கொமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள், குற்றச்சாட்டுக்கள் சுயாதீன விசாரணை நடத்த மறுப்பது தொடர்பாக கனடிய அரசாங்கம் ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். என்று ராதிகா சிற்சபேசன் வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணமே தமிழர்களின் அபிலாசையை பூர்த்தி செய்யும்!- ஈபிடிபி விக்னேஸ்வரன்
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 01:56.06 AM GMT ]
இலங்கையில் மாவட்ட மட்டத்தில் அதிகாரங்கள் பகிரப்படுவதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.அது தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யாது என்று முன்னைய அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகித்த ஈபிடிபியின் பிரதிநிதி கே. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதரகம் இந்த தகவலை இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு இணைந்த மாநிலமே தமிழர்களின் பாதுகாப்பையும் பிரதிநிதித்துவத்தையும் தேவையையும் பூர்த்தி செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபை திட்டத்தில் இருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை அகற்றும் திட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டிருக்கிறது.
எனினும் அதற்கு பதிலாக அந்தக்கட்சி எவ்வித யோசனையையும் முன்வைக்கவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
காணி, நீர் போன்வற்றின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் கொண்டிருக்கும் போது மாகாணங்களின் அபிவிருத்திகளை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten