[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 12:15.45 AM GMT ]
தற்போது பாவிக்கப்பட்டு வரும் சிம் அட்டைகளின் தொழில்நுட்பம் பழமை வாய்ந்தவையாகக் காணப்படுவதுடன், அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் பயன்படுத்தும் போது இலகுவாக ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் வழியாக படகுகள் மூலம் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க மாட்டோம் என்று அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இதனை சென்னையில் உள்ள அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான வழிமுறையை ஜேர்மன் நாட்டு புரோகிராமரான கார்ஸ்டன் நோல் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இதுபற்றி நோல் தெரிவிக்கையில்,
என்னிடம் ஏதாவது ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தினை தந்து சில நிமிட அவகாசமும் தாருங்கள், நான் அந்த இலக்கத்திற்குரிய சிம் அட்டையினை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுடன் அதன் ஒரு நகலையும் உருவாக்கி காட்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை கைப்பேசி சேவை வழங்குனர்கள் சிம் அட்டைகள் ஹேக் செய்யப்படுவதனை தடுக்க அவற்றிலுள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
படகு மூலம் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க மாட்டோம்! அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள்
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 12:32.43 AM GMT ]
இது குறித்து நேற்று புதன்கிழமை சென்னையில் செய்தியாளர்களை அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் சந்தித்தனர்.
அப்போது பேசிய குடியுரிமை அதிகாரி ஜோஸ் ஆல்வரஸ்,
ஈரான், ஈராக், இந்தோனேஷியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உரிய விசா இல்லாமல் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு நுழைவது அதிகரித்துள்ளது.
இதனால் கடத்தல் தரகர்கள் மூலம் அவுஸ்திரேலியா வரும் நபர்களுக்கு இனி அகதிகளுக்கான சலுகைகள் வழங்கப்பட மாட்டாது.
பப்பு கின்னியா மற்றும் அவுஸ்திரேலியா பிரதமர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குடியமர்த்தல் தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது.
கள்ளத்தனமாக படகில் வரும் நபர்கள் அவுஸ்திரேலியா நாட்டில் அருகில் உள்ள பப்புகின்னியாவுற்கு அனுப்பப்படுவர்.
இந்த மாற்றத்தின் மூலம் பப்பு கின்னியாவில் அகதிகள் அங்கேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இனி அவுஸ்திரேலியாவில் அகதிகள் தங்க குடியமர அனுமதியில்லை என்றார்.
இலங்கைத் தமிழர்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படுவர்
இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றால, அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என தென்னிந்தியாவுக்கான அவுஸ்திரேலியா துணைத் தூதர் பொறுப்பில் இருக்கும் ஸ்டூவர்ட் கேம்பல் தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்பவர்களை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten