[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 08:16.03 AM GMT ]
போலி கடன் அட்டை மூலம் 263 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபருக்கு சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்குமாறு இரகசிய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரச வங்கி ஒன்றின் கடன் அட்டை உரிமையாளர்களின் கடன் அட்டை தரவுகளை பயன்படுத்தி, போலி கடன் அட்டைகளை தயாரித்து, 263 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்ய சர்வதேச பிடிவிராந்தை பிறப்பிக்குமாறு இரகசிய பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே, வழக்கு விசாரணைகளை வரும் ஆகஸ்ட் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
தம்பிபாலன் ஜெயரதன் என்ற சந்தேக நபரை கைது செய்யவே, சர்வதேச பிடிவிராந்தை பிறப்பிக்குமாறு இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிதி மோசடியின் பிரதான சந்தேக நபரான இவர் தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்து வருகிறார் என்றும் இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
மேற்படி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த வங்கி உதவி முகாமையாளர் உட்பட 21 சந்தேக நபர்களை கோட்டை நீதவான் திலின கமகே இதற்கு முன்னர், பி்ணையில் விடுதலை செய்திருந்தார்.
நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமல்ல - சோபித தேரர்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 08:03.47 AM GMT ]
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள். உறுப்பினர்கள் மட்டுமல்லாது அவர்களின் வீடுகளில் உள்ள தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிக் கூட நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துகிறார்.
1978 ஆம் ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரத்தை, தற்போது கொழும்புக்கு வெளியில், தூர இடங்களில் உள்ள பிரதேச சபைகளில் இருப்பவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதற்கான புறச்சூழல் உருவாகியுள்ளது.
நாட்டில் அமைதி, ஒழுங்கை பாதுகாக்கவே பொலிஸ் இருக்கின்றது. இதனால் பொலிஸ் சுதந்திரமான நிறுவனமாக இருக்க வேண்டும். ஆனால் இன்று பொலிஸ், அரசியல் பொலிஸாக மாறியுள்ளது.
பொலிஸ் தற்போது, பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்களுக்கு பயந்து செயற்படுகிறது. இதனால், பொலிஸார் அவர்களின் அடிப்பணிந்த சேவகர்களாக மாறிவிட்டனர் என தெரிவித்தார்.

Geen opmerkingen:
Een reactie posten