தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 juli 2013

ஆளுனரின் அதிகாரங்களை வரையறுக்க வேண்டும்: விக்னேஸ்வரன்!

குறுந்தகவல் மூலம் இலங்கையர் பிரச்சினை தீர்க்கப்படும்! - டிலான் பெரேரா
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 08:19.59 AM GMT ]
வெளிநாட்டில் வேலைசெய்யும் இலங்கையர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை முறைப்பாடு செய்வதற்கு அலையவேண்டிய அவசியமில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெளிநாட்டு இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முறைப்பாடு செய்வதற்கென புதிய குறுந்தகவல் (SMS) முறையொன்றை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று முதல் அறிமுகம் செய்கிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா நேற்று குறுந்தகவல் முறைப்பாடு முறையை ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையில் எப்பாகத்தில் இருந்தும் பணியகத்தின் கிளை அலுவலகங்களினூடாக செய்யப்படும் முறைப்பாடுகள் குறுந்தகவலூடாக வேலைவாய்ப்பு முகவருக்கு அறிவிக்கப்படும். அதனைப் பெற்றுக்கொள்ளும் முகவர் முறைப்பாடு தொடர்பான தீர்வை 48 மணி நேரத்திற்குள் அறிவிக்க வேண்டும்.

இல்லையேல் அவர் நேரடியாக விசாரணைக்கு அழைக்கப்படுவர். முறைப்பாட்டாளர் நாட்டின் எந்தப் பாகத்தில் இருக்கிறாரோ, முகவர் அவரிடத்துக்குச் சென்று விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். முறைப்பாட்டாளர் பிரதான அலுவலகத்துக்கு வரவேண்டிய அவசியமில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஆளுனரின் அதிகாரங்களை வரையறுக்க வேண்டும்: விக்னேஸ்வரன்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 04:47.46 AM GMT ]
ஆளுனரின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். 13ம் திருத்தச் சட்டத்தை விடவும் கூடுதலான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
13ம் திருத்தச் சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
13ம் திருத்தச் சட்டத்தை விடவும் கூடுதல் அதிகாரங்களை வழங்குவதாக குறிப்பிட்ட அரசாங்கம், தற்போது அந்த சட்ட மூலத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றது.
மாகாணசபைகளுக்கு இடது கையில் வழங்கப்படும் அதிகாரங்களை மாகாண ஆளுனர்கள் வலது கையினால் எடுத்துக் கொள்வதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten