[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 07:50.37 AM GMT ]
கொஸ்கொட நதுன் என அழைக்கப்படும் நதுன் பீ. தர்மவிக்ரம என்ற இந்த நபர் இலங்கையில் பல கொலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதுடன், இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தற்பொழுது, இத்தாலியின் மிலானோ நகர பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக நபரை இலங்கைக்கு நாடு கடத்துவது சம்பந்தமாக பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரியிருந்தார்.
சட்டமா அதிபரின் சட்ட ஆலோசனைகள் வெளிநாட்டமைச்சுக்கு கிடைத்துள்ளது. சந்தேக நபரை நாடு கடத்துவது தொடர்பிலான ஆலோசனைகள் ரோமில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்க வெளிநாட்டமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை வெளிநாட்டு அமைச்சு வட்டாரங்கள் மூலம் தகவல் வெளிவந்துள்ளது.

திரு.விக்னேஸ்வரனின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் தமிழக அரசியல்வாதிகள்: டிலான் பெரேரா
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 07:15.34 AM GMT ]
மாகாண சபைகள் ஒழிக்கப்பட வேண்டுமென குரலெழுப்பியோர் அனைவரது குரலும் இன்று ஒழிந்துபோய் விட்டது. 13ஐ சுற்றிச் சுற்றியே, தீர்வை நோக்கிப்போக முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பத்திரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விக்னேஸ்வரனை தேர்தல் களத்தில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அழுத்தமே காரணமாகுமே தவிர இந்திய மத்திய அரசாங்கம் அல்ல.
வட மாகாண சபைத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கை ஓழுங்கியிருப்பதையும், வடபகுதி மக்கள் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள் என்ற அச்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் குடிகொண்டுள்ளது.
கூட்டமைப்பின் அரசாங்கம் தொடர்பிலான இந்த அச்சமே அரசியலோடு தொடர்புபடாத அரசியல் அனுபவமில்லாத முன்னாள் நீதியரசரர் சீ.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக வட மாகாணத்தில் களமிறக்குவதற்கு காரணமாகும்.
இதன்மூலம் அரசாங்கத்தின் கடும் போட்டிக்கு முகம் கொடுப்பதற்கு கூட்டமைப்பு வியூகத்தை வகுத்துள்ளது.
முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் பதவி வகித்தபோது சில வழக்குகளில் பிழையான தீர்ப்புக்களை வழங்கியதாக அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்திருப்பதில் உண்மையும் இருக்கலாம்.
இதுபோன்று, பல நீதியரசர்களின் தீர்ப்புக்களும் விமர்சனங்களுக்குள்ளான சந்தர்ப்பங்கள் உள்ளன.
முன்னாள் நீதியரசர்கள் அரசியலில் ஈடுபடுவது இது முதல் தடவையல்ல. சரத் என்.சில்வா, ஜயம்பதி போன்றோரும் அரசியலில் ஈடுபட்டனர்.
மாகாண சபைகளுக்கு எதிராகக் குரலெழுப்பியோரும் அதனை ஒழிக்கவேண்டுமென குருலெழுப்பியோரதும் குரல்கள் இன்று ஒழிந்து போய்விட்டன.
அன்றும், இன்றும் என்றும் நான் 13ஆவது திருத்தத்தை ஆதரிப்பவன். இதில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது. ஆனால், அன்று இத்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தது. குப்பைக் கூடையில் வீச வேண்டுமென்றது.

ஆனால், இன்று அதனை தூக்கிப்பிடித்துக் கொண்டுள்ளது. 13ஆகட்டும், 13 பிளஸ் 13 மைனஸ் இன் ரூ 2 ஆகட்டும் எது எப்படியிருந்தாலும், 13ஐ சுற்றிச் சுற்றியே தீர்வு உள்ளது. அதுவே தீர்வுக்கான பிரவேசமே தவிர வேறு பிரவேசம் கிடையாது.
தற்போது இயங்கும் மாகாண சபைகளுக்கும் பொலிஸ், காணி அதிகாரங்கள் உள்ளன. ஆனால், நிறைவேற்று அதிகாரத்தின் உத்தரவு இல்லாமல் அதனை நடைமுறைப்படுத்த முடியாது.
எனவே, வடமாகாண சபை தேர்தலால் எந்தவிதப் பிரச்சினையும் எழப்போவதில்லை. சிலர் இதனை பிள்ளை பிடிப்பவன் போன்ற பயங்கரமான சித்திரத்தை மக்களுக்கு கொடுக்கின்றனர்.
13இல் பிரச்சினைகள் இருந்தால் அவற்றை பேசித் தீர்வு காணலாம். திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
வட மாகாண சபைத் தேர்தலில் யார் வென்றாலும் அம்மக்களுக்கு ஜனநாயகம் கிடைக்கின்றது. தமக்கென்று ஒரு முதலமைச்சரை தெரிவு செய்யும் அரசியல் உரிமை கிடைக்கின்றது. அது அம்மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten