புத்தளம் முஸ்லிம் தொண்டராசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வை கல்வியமைச்சு ஒழுங்கு செய்யவில்லை: செயலாளர் தெரிவிப்பு
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 03:06.31 AM GMT ]
புத்தளத்திலிருந்து தொண்டராசிரியர்கள் என்ற போர்வையில் அமைச்சர் ரிசாத் பதியூதினின் ஆதரவாளர்கள் 300 பேருக்கு நியமனங்கள் வழங்க விடுமுறைநாளில் நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த நேர்முகத் தேர்வுகள் யார் ஒழுங்குபடுத்தினார்கள் என்று தெரியாது என்றும் தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தாம் பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான அரசியல் நியமனங்கள் வடமாகாணத்தின் கல்வியை அழித்து விடும் என்று கல்வியலாளர்கள் விசனமடைந்துள்ளனர்.
அணுத் தொழில்நுட்பம் தொடர்பில் ரஸ்யாவுடன் இலங்கை உடன்படிக்கை
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 02:40.56 AM GMT ]
அணுசக்தி தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ரஸ்ய அணுச்சக்தி முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், முன்னாள் ஜனாதிபதி சர்ஜீ திரியான்கோவிற்கும், இலங்கை அணுசக்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தனவிற்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அணுச்சக்தி ஆய்வு, அணுக்கழிவு முகாமைத்துவம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு எதிர்காலத்தில் அணுச் சக்தியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten