தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 juli 2013

காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என பசில் இந்தியாவிற்கு அறிவிப்பார்!

ஐ.தே.க.விலிருந்து மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு: அமைச்சுப் பதவிக்காக காத்திருப்பு?
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 01:33.40 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவத் தயாராக உள்ளதாகவும், தங்களுக்கான அமைச்சுப் பதவி தொடர்பில் உடன்பாடு எட்டும் வரை காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
இது தொடர்பான தகவலை ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் கட்சிமாறத் தயாராக இருக்கின்றனர்.
அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் அளிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக அவர்களின் கட்சித் தாவல் தற்போதைக்கு பின்போடப்பட்டுள்ளது.
எனினும் அரசாங்கம் கொண்டு வரும் எந்தவொரு பிரேரணைக்கும் வெளியில் இருந்து கொண்டே ஆதரவளிக்க அவர்கள் தயாராக இருக்கின்றார்கள்.
அவர்களை ஆளுங்கட்சிக்குள் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என பசில் இந்தியாவிற்கு அறிவிப்பார்
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 02:36.11 AM GMT ]
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்தியாவிற்கு அறிவிப்பார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது எனவும், ஏனைய அனைத்து அதிகாரங்களும் வட மாகாணசபைக்கு வழங்கப்படும் எனவும் பசில் ராஜபக்ச இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த உள்ளார்.
நாளை புதுடெல்லியில் இந்திய மத்திய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பசில் ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் இராணுவ முகாம்களை அகற்றுதல் மற்றும் பொலிஸாரை முதலமைச்சர் வழிநடத்தக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
13 அமைச்சர்கள் மட்டுமே 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை பசில் ராஜபக்ச சந்திக்கவுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten