தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 juli 2013

பகிடிவதைக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: கைது செய்யப் போவதாக அரசு எச்சரிக்கை!

இராணுவக் கல்லூரி ஆசிரியையின் நிர்வாணப் படம்: விமானப்படை வீரருக்கு வலைவீச்சு
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 03:15.05 AM GMT ]
ரத்மலானையில் உள்ள இராணுவக் கல்லூரி ஆசிரியை ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து, அவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக விமானப்படை வீரர் ஒருவரை பொலிசார் தேடிவருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் இராணுவ வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது,
ரத்மலானை இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியையாக கடமையாற்றும் பெண் ஒருவருக்கு விமானப்படை வீரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த ஆசிரியையுடன் அறையொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கிய விமானப்படை வீரர், அதன்போது அவரின் நிர்வாணப் புகைப்படங்களையும் எடுத்து வைத்துக் கொண்டுள்ளார்.
தற்போது அதனை வைத்துக் கொண்டு அவர் ஆசிரியையை மிரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இராணுவப் பயிற்சிக் கல்லூரி ஆசிரியை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் விமானப்படை வீரர் தொடர்பில் அவருடைய கைத்தொலைபேசி இலக்கம் தவிர வேறெந்தத் தகவலும் குறித்த ஆசிரியை அறிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிசார், விமானப்படை வீரரான சந்தேக நபரைத் தேடிவருகின்றனர்.

பகிடிவதைக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: கைது செய்யப் போவதாக அரசு எச்சரிக்கை
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 03:28.14 AM GMT ]
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மேற்கொள்ளப்படுவதை ஆதரித்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இதற்காக நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும் விசேட பஸ் வண்டிகள் மூலம் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பகிடிவதைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்யும் அனைத்து மாணவர்களையும் கைது செய்யப் போவதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கடுமையான அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும் மாணவர்களை கொழும்புக்கு ஏற்றிவரும் பஸ் வண்டிகளையும் பறிமுதல் செய்யப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டாரவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten