[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 01:55.50 AM GMT ]
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது தொடர்பில் தவறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் பின்னர் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் ரத்து செய்யப்பட உள்ளது.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்துவது குறித்து அரசாங்கமோ தேர்தல் ஆணையாளரோ கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை.
பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த இன்னமும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. உடனடியாக அழைப்பு விடுக்காவிட்டால் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த சந்தர்ப்பம் கிட்டாது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்காணிப்பாளர்களுக்கும் இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இறுதி நேரத்தில் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதனால் எவ்வித பயனையும் அடைய முடியாது.
இவ்வாறு இறுதி நேரத்தில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தினால் உள்நாட்டு கண்காணிப்பு நிறுவனங்களின் அறிக்கைகளுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களினது அறிக்கைகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை எற்படக் கூடுமென கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் பின்னர் பொலிஸ், காணி அதிகாரங்கள் ரத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 01:42.02 AM GMT ]
எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் பின்னர் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடான பொலிஸ், காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக அரசாங்க உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
காணி, காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்வது குறித்த யோசனைத் திட்டம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டைத் தொடர்ந்து உடனடியாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதேவேளை, வட மாகாணசபையில் ஆட்சியை நிறுவி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஊடாக காணி, பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் அவசியமானவை புலம்பெயர் புலி ஆதரவு ஐரோப்பிய வானொலிச் சேவையொன்றுக்கு விக்னேஸ்வரன் செவ்வியளித்துள்ளதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten